திடீரென சம்பளத்தை உயர்த்திய சுருதிஹாசன்.. ஒரு படத்தில் நடிக்க எத்தனை கோடி கேட்கிறார் தெரியுமா.?

shruthi-haasan
shruthi-haasan

தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத நடிகர் உலகநாயகன் கமலஹாசன். இவரை தொடர்ந்து அவரது இரண்டு மகள்களும் சினிமா உலகில் வெற்றியை ருசித்து வருகின்றனர் குறிப்பாக மூத்த மகள் சுருதிஹாசன் தொடர்ந்து ஹிட் படங்களில் நடித்து வருகிறார். இவர் முதலில் ஹேராம் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து ஹிந்தி, தெலுங்கு போன்ற படங்களில் நடித்து வந்த இவர் 2011 ஆம் ஆண்டு ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான 7 ஆம் அறிவு திரைப்படத்தில் ஹீரோயின்னாக நடித்து தமிழ் சினிமா உலகில் என்ட்ரி கொடுத்தார். முதல் படமே ஹிட் படமாக அமைந்ததால் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைத்தன.

தமிழில் 3, பூஜை, புலி, வேதாளம், சிங்கம் 3, லாபம் போன்ற படங்களில் நடித்தார் ஆனால் தற்பொழுது தமிழில் பெரிய அளவு பட வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் தெலுங்கில் தொடர்ந்து டாப் ஹீரோயின் படங்களில் நடித்து வருகிறார் அந்த வகையில் அண்மையில் இவர் நடிப்பில் உருவான வால்டர் வீரய்யா..

மற்றும் வீர சிம்ஹா ரெட்டி போன்ற படங்கள் அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இதனால் நடிகை சுருதிஹாசனின் மார்க்கெட் அசுர வளர்ச்சியை எட்டி உள்ளது தற்பொழுது கூட சலார், the eye போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சுருதிஹாசன் ஒரு படத்திற்கு எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்.

என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது அதன்படி வால்டர் வீரய்யா மற்றும் வீர சிம்ஹா ரெட்டி ஆகிய இரண்டு படங்களுக்கும் தலா 2.5 கோடி சம்பளம் வாங்கியுள்ளார் என கூறப்படுகிறது. இந்த தகவல் மற்ற நடிகைகளுக்கு ஆச்சரியத்தை கொடுத்திருக்கிறதாம்.