சினிமாவுலகில் பன்முகத் தன்மை கொண்டவராக விளங்கி வருவர் உலக நாயகன் கமலஹாசன் அவரைப் போலவே அவரது பிள்ளைகளான சுருதிஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் இருவரையுமே பல்வேறு திறமைகளை வைத்துள்ளனர் அதிலும் குறிப்பாக சுருதிஹாசன் நடிப்பையும் தாண்டி பாடகராகவும் நடனம் ஆடுவதிலும் திறமையான பெண்ணாக இருப்பதால் சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு நாயகியாக விஸ்வரூபம் எடுத்து உள்ளார்.
நடிகை சுருதிஹாசன் தமிழில் சூர்யா, விஜய், அஜித் போன்ற டாப் ஹீரோக்களுடன் கைகோர்த்து தனது திறமையை வெளிகாட்டியதன் மூலம் மற்ற மொழிகளிலும் இவருக்கு வாய்ப்புகள் குவிந்தது தெலுங்கில் தற்போது முன்னணி நடிகையாக விஸ்வரூபம் எடுத்துள்ளாராம் சமீபத்தில் கூட இவர் கிராக் என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்து அசத்தி இருந்தார்.
அந்த திரைப்படத்தை தொடர்ந்து தற்போது பல்வேறு பல வாய்ப்புகள் அவருக்கு வந்த வண்ணமே இருகின்றன அந்த வகையில் பிரபாகரனுடன் இணைந்து சலார் என்ற படத்தில் நடிக்கிறார். ஸ்ருதிஹாசன் தமிழில் கடைசியாக விஜய் சேதுபதியுடன் கைகோர்த்து லாபம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த படம் பெரிய அளவில் வரவேற்பைப் பெறாததால் தமிழில் சொல்லிக் கொள்ளும்படி வாய்ப்புகள் கிடைக்காமல் இருக்கிறார்.
ஆனால் தெலுங்கில் இவருக்கு வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருக்கின்றன இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் இவர் சமூக வலைதளப் பக்கங்களில் போட்டோக்களை அள்ளி வீசுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் இதுவரை யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு பிகினி மற்றும் தம்மாத்தூண்டு டிரஸ்களை போட்டு உலா வருகிறார் .
இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை ஸ்ருதிஹாசன் விளம்பரப் படத்திற்காக நகைகளை அள்ளிப்போட்டுக்கொண்டு இவர் எடுத்துக்கொண்ட போட்டோஷூட் இணையதளப் பக்கத்தில் தீயாய் பரவி வருகிறது. இதோ அந்த அழகிய புகைப்படம்.