என்னை பார்த்தால் ரஜினிக்கு அந்த நடிகை தான் ஞாபகம் வருவார்.! பிரபல நடிகை சுவாரஸ்ய பேட்டி..

Rajinikanth: நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பார்த்தாலே இந்த நடிகை தான் ஞாபகம் வருவார் என சூப்பரான தகவலை பிரபல நடிகை கூறி இருக்கும் நிலையில் இந்த தகவல்கள் மீடியாவில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் ரஜினிகாந்த் அவர்கள் தவிர்க்க முடியாத முக்கிய நடிகராக இருந்து வருகிறார்.

மேலும் இளம் நடிகைகள் முதல் முன்னணி நடிகைகள் வரை அனைவரும் சூப்பர் ஸ்டார் உடன் ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என ஆசைப்படுவது வழக்கம். அந்த வகையில் ரஜினிக்கு வயதானாலும் கூட ஏராளமான இளம் நடிகைகள் ஜோடி போட்டு நடித்து வருகின்றனர். அப்படி தற்பொழுது இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தில் நடித்துவரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது இதில் இவருக்கு ஜோடியாக நடிகை தமன்னா நடித்து வருகிறார்.

இந்நிலையில் திமிரு படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு முதன்முறையாக அறிமுகமானவர்தான் நடிகை ஸ்ரேயா ரெட்டி. இவர் ரஜினியின் தீவிர ரசிகையாவார் இவர் ரஜினி படத்தை தவிர வேறு எந்த நடிகர்களின் படங்களையும் பார்க்க மாட்டாராம். அதுவும் முதல் நாள் முதல் ஷோவை பார்ப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். அப்படி படையப்பா படத்தினையும் பார்த்திருக்கிறார். ஸ்ரேயா ரெட்டி பள்ளி பருவத்தில் இருந்து ரஜினியின் படங்களை பார்த்து வரும் நிலையில் அந்த படத்தின் நீலாம்பரி கதாபாத்திரத்தில் மிகவும் ஈடுபாடுடன் நடித்ததால் இப்படி ஒரு கதாபாத்திரத்தில் ஒரு தடவையாவது நம்மளும் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்ததாம்.

அந்த வகையில் திமிரு படத்தில் ஈஸ்வரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஸ்ரேயா ரெட்டிக்கு ரொமான்ஸ்,  டான்ஸ் போன்றவை எல்லாம் சுத்தமாக வராதாம் இதன் காரணமாகவே நடிக்க வந்து உள்ளார். தான் நடிக்கும் அனைத்து கதாபாத்திரங்களும் தரமானதாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பாராம் அப்படி திமிரு படத்தினை பார்த்து விட்டு ஒருவர்  போன் செய்து ஒரு ஐட்டம் சாங் நடிக்கிறீர்களா என்று கேட்டுள்ளார்.

உடனே அவரை மிகவும் கேவலமாக திட்டி விட்டாராம். திமிரு படத்தில் எப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன் என்னை இப்படி ஐட்டம் பாடலுக்கு நடனமாட கூப்பிடுகிறீர்களே என கேட்டாராம். இவ்வாறு ரஜினியை சின்ன வயதில் இருந்தே தனது அப்பாவாக பார்த்து வருகிறாராம். போயஸ் கார்டனில் சின்ன வயதில் இருந்து அனைவரும் சேர்ந்து விளையாடுவார்களாம். மேலும் ரஜினி ஸ்ரேயாவை பார்த்து அடிக்கடி நடிகை தபு மாதிரியே இருக்கிறாய் என்று சொல்வாராம் ஆனால் சமீப காலங்களாக அனைவரும் என்னை எப்படி தான் சொல்கிறார்கள் என கூறி இருக்கிறார்.

Leave a Comment