தற்போது சின்னத்திரை வெள்ளித்திரையில் நடித்து வரும் அனைத்து நடிகைகளும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறார்கள். ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து விட்டால் திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்பதை மனதில் வைத்துக் கொண்டு தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.
அந்த வகையில் தற்போது இன்ஸ்டாகிராமில் மிகவும் பிரபலமாக இருந்து வருபவர் தான் நடிகை ஷிவானி நாராயணன். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார். பிறகு பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம் மற்றும் ஜீ தமிழ் இரட்டை ரோஜா உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமடைந்தார்.
இவ்வாறு மிகவும் பிஸியாக நடித்து வந்த இவருக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. இந்நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு ஒரு சில திரைப்படங்களில் கதாநாயகியாகவும் நடித்து வருகிறார். அந்த வகையில் கமலின் விக்ரம், வடிவேலுவின் படம் ஒன்று, ஆர்கே பாலாஜியின் படம் என பல நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.
இவ்வாறு முன்னேறி உள்ள இவருக்கு ரசிகர் ஒருவர் ஷிவானி நாராயணன் புகைப்படத்தை வர்ணித்து அவருக்கு பரிசளித்துள்ளார்.அதோடு பரிசில் எழுதியிருந்த கதையை அப்படியே பாட்டாக பாடி ஷிவானி நாராயணனை வர்ணித்துள்ளார்.அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.