சிவானி நாராயணன் சீரியலில் அடியெடுத்து வைப்பதற்கு முன்பாகவே மாடலிங் துறையில் பயணித்தவர் பின் ஒரு கட்டத்தில் சின்னத்திரையில் இவர் பல்வேறு சீரியல்களில் நடித்தாராம் கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா போன்ற பல்வேறு சீரியல்களில் நடித்து வந்த இவர் திடீரென அதிலிருந்து விலகி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மாடல் அழகி என்பதை காட்டும் வகையில் தொடர்ந்து கிளாமரான புகைப்படம் மற்றும் பாடலுக்கு நடனமாடிய சுற்றிவந்தார்.
இவருக்கான வரவேற்பு இன்ஸ்டாவில் நன்றாகவே இருந்ததால் லட்சக்கணக்கான ரசிகர்களை தன் பின்னால் இழுத்துப் போட்டார் ஒரு கட்டத்தில் உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 4 – ல் கலந்து கொள்ளும் வாய்ப்பைப் பெற்றார் பிக்பாஸ் வீட்டினுள் மற்ற போட்டியாளர்களை போல டைட்டில் வின்னர் பெற முயற்சித்தாரோ இல்லையோ தனது திறமையை காட்ட ஆரம்பித்தார்.
காதல் ரொமான்டிக் சென்டிமென்ட் என மற்ற கதாபாத்திரங்களை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு நல்ல விருந்து படைத்தார் வெளியே வந்த அவருக்கு பட வாய்ப்பு கிடைக்காததால் மீண்டும் தனது பழைய வேலையான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருந்தார்.
எது எப்படியோ இப்பொழுது பட வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளதாம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு உலகநாயகன் கமலஹாசனுடன் இணைந்து விக்ரம் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து பொன்ராம் இயக்கும் ஒரு படத்திலும் ஆர்ஜே பாலாஜி இயக்கும் ஒரு படத்திலும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் வடிவேலுடன் அவர் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து பட வாய்ப்பை அள்ளி வருவதால் ஷிவானி நாராயணன் சந்தோஷத்தில் இருப்பதோடு ஆடையின் அளவை இன்னும் தாறுமாறாக குறைத்து கிளாமரான புகைப்படங்களை அள்ளி வீசி வருகிறார். இப்ப கூட நடிகை ஷிவானி நாராயணன் லைட் போட்டு தனது அழகான மேனி யை தூக்கி காண்பித்து இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணைய தள பக்கத்தில் வைரலாகி வருகிறது.