டாப் நடிகைகளுக்கு இணையாக சின்னத்திரை நடிகைகள் சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன் பக்கம் ஈர்க்கின்றன. அந்த வகையில் சோஷியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ஒருவர் ஷிவானி நாராயணன்.
இவர் பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா, போன்ற சீரியல்களில் ஹீரோயினாக நடித்த அறிமுகமானவர். மேலும் இவருக்கு இளம் வயதிலேயே சீரியலில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு இவர் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பாக விளையாடி 90 நாட்களை கடந்து தாக்க பிடித்துள்ளார்.
இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு தற்போது ஷிவானினுக்கு வெள்ளித்திரையில் திரைப்பட வாய்ப்புகள் பல வந்தவண்ணம் உள்ளன. அந்த வகையில் டாப் ஹீரோ கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் விக்ரம் திரைப்படத்தில் ஷிவானி இணைந்துள்ளார். மேலும் இந்தத் திரைப்படத்தில் மற்றொரு டாப் ஹீரோவான விஜய்சேதுபதி நடித்து வருகிறார்.
விஜய் சேதுபதிக்கு ஜோடியாக தான் ஷிவானி நடிக்க உள்ளார் என்ற தகவல் ஏற்கனவே வெளியாகியது. இதனை அடுத்து தற்போது அடுத்த திரைப்படமான பொன்ராம் திரைப்படத்திலும் ஷிவானி இணைந்துள்ளார் என்ற தகவலும் வெளியாகின மேலும் இதிலும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக தான் ஷிவானி நடிக்க உள்ளாராம்.
இதனையடுத்து இந்த படத்தில் இவர் காவல்துறை அதிகாரியாக நடிக்க உள்ள நிலையில் இவர் காவல்துறை உடை அணிந்து செம்ம ஸ்டைலாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் போலீஸ் ட்ரெஸ்ல கூட கிளாமர் காட்ரிங்க என கமெண்ட் அடித்து வருகின்றனர்.