Shivani Narayanan: நடிகை ஷிவானி நாராயணன் ஓணம் ஸ்பெஷலாக நியூ லுக் போட்டோ ஷூட் நடத்தி இருக்கும் நிலையில் அந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது இதற்கு ரசிகர்கள் லைக்களையும், கமெண்ட்களையும் குவித்து வருகின்றனர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலம் சின்னத்திரை அறிமுகமான ஷிவானி இதனை தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா உள்ளிட்ட மேலும் சில சீரியல்களில் நடித்து வந்த நிலையில் இதனை அடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார்.
இந்நிகழ்ச்சிருக்கு பிறகு தொடர்ந்து திரைப்படங்களில் ஹீரோயினாக நடிப்பார் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆனால் சைட் கேரக்டர்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் கமலஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு மூன்றாவது மனைவியாக நடித்திருந்தார்.
எனவே இதனால் ரசிகர்கள் ஷாக்கான நிலையில் தனக்கு எந்த கேரக்டர் வந்தாலும் தனது பெஸ்ட் கொடுக்க வேண்டும் என்பது போன்று ஷிவானி பேட்டி அளித்தார். இதனை அடுத்து மேலும் சில திரைப்படங்களில் நடித்து வரும் ஷிவானி தொடர்ந்து சோசியல் மீடியாவில் தனது ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் தற்பொழுது ஓணம் ஸ்பெஷலாக கேரளா லுக்கில் இவர் நடத்தி இருக்கும் போட்டோ ஷூட் பட்டித்தொட்டி எங்கும் வைரலாக லைக்குகள் குவிந்து வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்.