தற்போழுதெல்லாம் வெள்ளித்திரை நடிகைகளை விடவும் சின்னத்திரை நடிகைகள் தான் அதிக அளவில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் சின்னத்திரை நடிகைகள் வெள்ளித்திரை நடிகைகளுக்கு சளைத்தவர்கள் அல்ல என்று தங்களது நடிப்பு திறமையிலும், கவர்ச்சியிலும் அதிக ஆர்வம் செலுத்தி வருகிறார்கள்.
இவ்வாறு போகிற போக்கை பார்த்தால் வெள்ளித்திரை நடிகைகளை விட சின்னத்திரை நடிகைகளின் ஆதிக்கம் தான் அதிக அளவில் இருந்து வரும் போல.இதற்கெல்லாம் முக்கிய காரணம் இந்த ஊரடங்கு தான் ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து ஆக்டிவாக இருக்க வரவேண்டும் என்பதற்காகவும், தனக்கென ஒரு ரசிகர் பட்டாளம் உருவாக வேண்டும் என்பதற்காகவும் தொடர்ந்து சோஷியல் மீடியாவில் கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிடுவது ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிப்பது போன்றவற்றை செய்து வருகிறார்கள்.
அந்த வகையில் தனது 19 வயதிலேயே சின்னத்திரைக்கு அறிமுகமாகி தற்பொழுது வெள்ளித்திரையில் ஹீரோயினாக நடிக்க உள்ளவர் தான் நடிகை ஷிவானி நாராயணன். இவர் பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பகல் நிலவு சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார்.
இதனை தொடர்ந்து கடை குட்டி சிங்கம் மற்றும் ஜீ தமிழில் இரட்டை ரோஜா உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வந்தார். இப்படிப்பட்ட நிலையில்தான் இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. இதன் மூலம் பிரபலமடைந்துள்ள இவருக்கு தற்பொழுது வெள்ளித்திரையில் சில திரைப் படங்களில் ஹீரோயினாக நடிக்க உள்ளதாகவும் அந்த திரைப்படத்தின் சூட்டிங் விரைவில் துவங்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.
இந்நிலையில் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் சமீபத்தில் கடற்கரை சென்று டி ஷர்ட்டில் சைடு போசில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்.