தற்பொழுது உள்ள அனைத்து நடிகைகளும் சோஷியல் மீடியாவில் தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைய வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் சோஷியல் மீடியாவில் தனது புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து அவர்களில் ஒருவர்தான் நடிகை ஷிவானி நாராயணன்.
இவ்வாறு சோஷியல் மீடியாவில் இவரின் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றதால் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பகல்நிலவு சீரியலில் ஹீரோயினாக நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. இந்த சீரியலை தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம் சீரியலில் நடித்து வந்தார். பிறகு ஜீ தமிழ் ஒளிபரப்பாகி வந்த இரட்டை ரோஜா போன்ற சீரியல்களில் நடித்து வந்த இவருக்கு பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது.
எனவே சீரியலில் நடிப்பதை நிறுத்திவிட்டு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தொடர்ந்து சில திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார். அந்தவகையில் கமலின் விக்ரம் படம், வடிவேலுவின் படம், ஆர்கே பாலாஜியுடன் ஒரு படம், பொன்ராமன் படம் என அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து மிகவும் பிஸியாக இருந்து வருகிறார்.
விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் மனைவியாக சிவானி நடித்திருந்ததால் இவருக்கு மிகப்பெரிய ரீச்சை வாங்கி தரும் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் கடைசியில் 2 சீன்கள் மட்டுமே ஷிவானி திரையில் தோன்றினார்.
இதன் காரணமாக ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றமே ஏற்பட்டது. இதன் காரணமாக ரசிகர்கள் ஷிவானிடம் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு உங்களை லீஸ்ட் பார்க்க விரும்பினோம் ஏன் இவ்வளவு சின்ன ரோலில் நடிப்பீர்கள் கதையை சரியாக தேர்ந்தெடுங்கள் என்று கூறியுள்ளார்.
அதற்கு பதில் கூறிய ஷிவானி அதாவது சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்றுள்ள சாதாரண பெண் தான் நான் அந்த இடத்தை அடைய பல தடைகளை தாண்டி தான் சென்றுள்ளேன். இது வெறும் ஆரம்பம் தான் இன்னும் நிறைய இருக்கிறது எதையும் வகைப்படுத்த கூடாது கிடைத்த சின்ன ரோலில் கூட நான் என்னுடைய பங்களிப்பை எப்படி தருகிறேன் என்று தான் பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.