ரஞ்சிதமே ரஞ்சிதமே பாடலுக்கு கிளாமர் குத்தாட்டம் போட்ட ஷிவானி நாராயணன்..! இளசுகளை ஆட்டி படைக்கும் வீடியோ..

shivani-narayanan-
shivani-narayanan-

தெலுங்கு இயக்குனர் வம்சியுடன் முதல் முறையாக கைகொடுத்து தளபதி விஜய் நடித்த திரைப்படம்  வாரிசு. இந்தப் படம் விஜய்க்கு 66-வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது இந்த படத்தை மிக பிரம்மாண்ட பொருள் செலவில் தில் ராஜீ தயாரிக்கிறார். தற்போது படக்குழு படத்தின் டப்பிங் மற்றும் போஸ்ட் ப்ரோமோஷன் வேலைகளில் தீவிரம் காட்டி வருகிறது.

இந்தப் படம் முழுக்க முழுக்க ஒரு குடும்ப செண்டிமெண்ட் திரைப்படமாக உருவாக்கி வருகிறது. படத்தில் விஜய் உடன் கைகோர்த்து ராஷ்மிகா மந்தன்னா, ஜெயசுதா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், யோகி பாபு மற்றும் பல முக்கிய நடிகர் நடிகைகள் திரைப்படத்தில் நடித்துள்ளனர். இதனால் மக்கள் மற்றும் ரசிகர்கள் இந்த படத்தை பெரிய அளவில் எதிர்பார்க்கின்றனர்.

ஆனால் படம் பொங்கலை முன்னிட்டு வெளியாகும் ஏற்கனவே சொல்லி வந்த நிலையில் தற்போது அடுத்தடுத்த சிக்கல் பட குழுவிற்கு வந்துள்ளது அதாவது  தெலுங்கு சினிமா தயாரிப்பாளர்கள் முதலில் தெலுங்கு படங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என கூறி போராட்டம் நடத்துகிறது.

மறுபக்கம் வாரிசு படத்திற்கு எதிராக அஜித்தின் துணிவு மோதுவதால் தற்போது இது சரியாக வராது என கருதி படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றி இருக்கிறது. வாரிசு திரைப்படம் பொங்கலையும் தாண்டி ஜனவரி 26 ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய முனைப்பு காட்டி இருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் வளர்ந்து வரும் நடிகை ஷிவானி நாராயணன்.

தனது சமூக வலைதள பக்கத்தில் விஜயின் வாரிசு படத்தில் இடம்பெற்றுள்ள ரஞ்சிதமே ரஞ்சிதமே பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டுள்ளார் ஷிவானி நாராயணன் வெளியிட்டுள்ள அந்த வீடியோ தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இதோ ஷிவானி நாராயணன் ஆட்டம் போட்ட அந்த வீடியோ..