சிவாங்கி விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் பாடல் நிகழ்ச்சி மூலம் அறிமுகமானவர். சூப்பர் சிங்கரில் பாடுவது மட்டுமல்லாமல் காமெடி ரசிகர்களைக் கவர்ந்தார்.
இதை தொடர்ந்து விஜய் டிவியில் குக் வித் கோமாளி என்ற ஷோ ஆரம்பித்தனர் எனவே அந்த ஷோவில் கோமாளியாக ஷிவாங்கி பங்கேற்றார். இந்த ஷோவில் இவரும் புகழும் இணைந்து காமெடி செய்வது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது எனவே இதன் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார்.
குக் வித்கோமாளி சீசன் 1க்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து தற்போது சீசன் 2 நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் சிவாங்கி நடிகர் அஸ்வினிடம் பேசி பழகுவது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
அதுமட்டுமல்லாமல் சிவாங்கி ஒவ்வொரு வாரமும் போடும் வேடமும் ரசிகர்களைக் கவர்ந்தது. மேலும் ஷிவானிக்கு தற்போது கிடைத்த கலைமாமணி விருதுக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் என அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
அதுமட்டுமல்லாமல் நடிகர் சிவகார்த்திகேயன் அவர் நடிக்கயிருக்கும் டான் திரைப்படத்தில் சிவாங்கிக்கு தானாகவே முன்வந்து நடிக்க வாய்ப்பு கொடுத்துள்ளார். மேலும் இந்த நிலையில் சிவாங்கி தனது தோழிகளுடன் இருக்கும் பள்ளிப்பருவ புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.