விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் மூலம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரீ என்ட்ரி கொடுத்தவர் தான் நடிகை ஷீலா. இவர் விஜயின் தாயான நடிகை சோபாவின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இவர் விஜய்க்கு சித்தி முறை ஆவார் சமீபத்தில் பிரபல ஊடகம் ஒன்றில் கலந்து கொண்ட ஷீலா நடிகர் விஜய் பற்றிய சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
அவர் கூறியதாவது, விஜய் பிறக்கும்பொழுது நான் பத்தாவது படித்துக் கொண்டிருந்தேன், அவரை நாங்கள் அனைவரும் தான் வளர்த்தோம், எந்த பிரச்சனையும் செய்யாத சமத்து பையன் தான் விஜய், அப்பொழுது அவருடன் என்னுடைய பெரிய பையன் சஞ்சய் இருப்பார். அவர் தற்பொழுது படங்களில் பிசியாக நடித்து வருவதால் அவரைப் பார்த்து பல நாட்கள் ஆகிவிட்டது, மேலும் பேச முடியவில்லை என்ற வருத்தமும் இருக்கிறது ஆனால் அவர் பெரிய இடத்தில் இருக்கிறார் என்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
விஜயின் தங்கை இறக்கும்பொழுது அனைவரும் ஒன்றாக தான் இருந்தோம் அந்த காலத்தில் இப்பொழுது உள்ளது போல மருத்துவம் கிடையாது போராடி பார்த்தார்கள் ஆனால் முடியவில்லை விஜய் அதற்கு பிறகு தான் மிகவும் சோகமாகிவிட்டார். அப்பொழுது விஜய்க்கு சிறிய வயதுதான் இந்நிலையில் கூடவே கண்முன்னே தன்னுடைய தங்கை இறந்தது அவருக்கு மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியது.
அதன் பிறகு தான் விஜய் அமைதியா இருக்க தொடங்கினார் அப்பொழுதெல்லாம் நாங்கள் அக்காவின் வீட்டு பக்கத்தில் தான் இருந்தோம் அங்கே பல படப்பிடிப்புகள் நடக்கும் அங்கே தான் நடிகர் விஜய்யின் பல படங்களின் படப்பிடிப்பு நடந்தது. அப்பொழுது விஜய் பாலலோக் உயர்நிலைப் பள்ளியில் தான் படித்து வந்தார் விஜய் பள்ளிக்கு சென்று வந்த பின்னர் வீட்டிற்கு பின் இருக்கும் இடத்திற்கு சென்று அங்கிருந்து படப்பிடிப்பை பார்த்து ரசித்துக் கொண்டிருப்போம்.
தற்பொழுது மிகப்பெரிய உயரத்திற்கு சென்றுவிட்டார் என்பது பெருமையாக இருக்கிறது என கூறியுள்ளார். விஜயைப் பற்றிய விமர்சனங்கள் வரும்பொழுது எங்களுக்கு மிகவும் கடினமாக இருக்கும் இருந்தாலும் அவர்களே பின்னர் அழைத்து விஜயை பாராட்டினார்கள். தொடக்கத்தில் விஜய் நடிக்க வருவார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை ஏனென்றால் படித்துக் கொண்டிருந்தார்.
அவர் பின்னர் திடீரென சினிமாவுக்கு வந்துவிட்டார் அதனால் அதற்கு பிறகு அவர் படத்தில் நடிப்பதையும், நடனம் ஆடுவதையும் பார்த்து நம்முடைய விஜய்யா இது என்ற அளவிற்கு நடனம் ஆடினார். இதற்கும் அவர் நடனப் பயிற்சி பள்ளிக்கூட செல்லவில்லை மேலும் பொதுவாக எங்கள் வீட்டில் யாரும் அவர்களுடைய சினிமா வாழ்க்கை பற்றி பேசிக் கொள்ளவே மாட்டோம் நான் என்ன சீரியலில் நடிக்கிறேன் என்று என்னுடைய குடும்பத்திற்கு தெரியாது.
அந்த அளவிற்கு அதிகமாக அந்த விஷயத்தை எடுத்துக் கொள்ள மாட்டோம் ஆனால் பகவதி படத்தில் விஜய் நடிக்கும் பொழுது சினிமாவில் ஜெய் வருவார் என்று எதிர்பார்க்கவில்லை. நானும் ஒரு முறையாவது விஜய் ஓட நடிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருக்கிறது நேரம் காலம் எல்லாம் சரியாக வந்தால் நடிப்பேன் என கூறிவுள்ளார் நடிகை ஷீலா.