என்னுடைய பொழப்பை கெடுத்து வாழ்க்கையை நாசமாக்கியது கவுண்டமணி தான்.! நடிகை ஷர்மிலி பேட்டி..

kavundamani

நகைச்சுவை நடிகர் கவுண்டமணியினால் தான் எனது சினிமா வாழ்க்கையை நாசமாகியது  என அவருக்கு ஜோடியாக நடித்த பிரபல நடிகை ஷர்மிலி தெரிவித்துள்ளார். அதாவது தமிழ் சினிமாவில் 90 கால கட்டத்தில் குணச்சித்திர கேரக்டரில் நடித்து பிரபலமானவர்தான் நடிகை ஷர்மிலி. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என ஏராளமான மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமானார்.

அந்த வகையில் கவுண்டமணி உடன் மட்டும் சுமார் 27 படங்களுக்கு மேல் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்பொழுது சினிமாவை விட்டு மொத்தமாக விலகி உள்ளார் இந்நிலையில் சமீபத்தில் பிரபல யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த ஷர்மிலி தற்பொழுது நான் திருமண வாழ்க்கையை நிம்மதியாக வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் என் கணவர் என்னை அன்பாக கவனித்துக் கொள்கிறார் ஒரு காலத்தில் திருமணமே வேண்டாம் என்று இருந்தேன் ஆனால் 40 வயதுக்கு மேல் நிச்சயம் ஒரு துணை தேவை என்பதை புரிந்துங கொண்டு திருமணம் செய்து கொண்டேன் இப்பொழுது நான் கர்ப்பமாக இருக்கிறேன்.

மேலும் குரூப் டான்சராக இருந்த நான் பொண்டாட்டி சொன்னா கேட்கணும், எங்க வீட்டு வேலன் போன்ற படங்களில் நடித்துக் கொண்டிருந்தேன் அப்பொழுதுதான் கவுண்டமணிக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்று அழைப்பு வந்தது எனது காமெடி எல்லாம் வராது அதுவும் இல்லாமல் அவர் வயசு என்ன என் வயசு என்ன என்று மறுத்துவிட்டேன் அதன் பிறகு கவுண்டமணிக்கு ஜோடியாக கிட்டத்தட்ட 27 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறேன்.

நான் கவுண்டமணி உடன் நடித்ததால் தான் பிரபலமானேன் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை ஆனால் அவருடன் சேர்ந்து நடித்ததால் பல நல்ல கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்பை இழந்தேன் அதேபோல அவரும் பல பட வாய்ப்புகளை இழந்து இருக்கிறார். வீரா படத்தில் ரஜினியுடன் ஒரு பாடலுக்கு என்னை புக் செய்து இருந்தார்கள் ஆனால் கவுண்டமணி அதே தேதியில் தான் நான் டேட் கொடுத்து இருக்கிறேன் என்று சொல்லி நடிக்க முடியாமல் செய்துவிட்டார்.

sharmili
sharmili

இதனால் கவுண்டமணியிடம் கேட்டு ஷூட்டிங்க்கு தேதி புக் செய்யும் நிலைமையாகிவிட்டது ஒரு கட்டத்தில் பத்திரிக்கையாளர்களும் ஷர்மிலி கவுண்டமணி உடன் மட்டும்தான் நடிப்பார் என எழுத ஆரம்பித்து விட்டார்கள். இதனால் நான் கவுண்டமணிக்கு ஜோடியாக நடிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டேன் நான் அப்படி சொல்லி விட்டதால் டென்ஷனான கவுண்டமணி புக்காகி இருந்த அனைத்து படங்களில் இருந்து என்னை தூக்கிவிட்டார் இதுபோன்று பல படங்களில் நடிக்க இருந்த என்னை நீக்கி என் பொழப்பை கெடுத்து வாழ்க்கையை நாசமாக்கியது கவுண்டமணி தான் என்று ஷர்மிலி பேட்டியில் வெளிப்படையாக கூறியுள்ளார்.