தமிழ் சினிமாவில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற திரைப்படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலமானார் நடிகை ஷாலு ஷம்மு.
இந்த திரைப்படத்தில் இவர் நடிப்பதற்கு முன்பே 2009ஆம் ஆண்டு காஞ்சிவரம் என்ற திரைப்படத்தில் நடிகைக்கு தோழியாக நடித்திருப்பார். இந்த திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருதினை பெற்றார்.
பின் அதனை தொடர்ந்து சில படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் மேலும் தனது திரைப்பட வாய்ப்பினை அதிகரித்துக் கொள்வதற்காக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
திரைப்படங்களில் இவர் பொதுவாக அடக்க ஒடுக்கமாக கிராமத்து பாணியில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இப்படி இருக்கும் இவர் தற்போது வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்த்து ரசிகர்கள் இவரா இப்படி என ஆச்சரியப்படுகின்றனர்.
இந்தநிலையில் இவர் தற்போது பட்டு புடவை கட்டிக்கொண்டு மிக அழகாக இயற்கையான சூழலில் போட்டோ ஷூட் நடத்தி இணையதளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதோ அந்த புகைப்படம்.