வறண்ட காட்டுக்குள் ஆண் நண்பர்களுடன் என்ஜாய் எஞ்ஜாமி பாட்டுக்கு குத்தாட்டம் போட்ட ஷாலு ஷம்மு.!! வைரலாகும் வீடியோ.

தற்போது உள்ள இளம் நடிகைகளில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஷாலு ஷம்மு. இவர் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தின் மூலம் துணை நடிகையாக நடித்து  பிரபலம் அடைந்தார்.  இதனைத் தொடர்ந்து பல படங்களில் குணச்சித்திர நடிகையாகவும்,துணை நடிகையாகவும் நடித்து சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.

இந்நிலையில் தற்போது இவர் எப்படியாவது திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்கள், வீடியோக்கள் என்று பலவற்றை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்பொழுது மிகவும் ஃபேமஸ்சானா பாடலாக இருந்து கொண்டிருப்பது என்ஜாய் என்ஜாமி. இந்தப் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் ரசிகர்கள்,திரைப்பிரபலங்கள் என்று அனைவரும் இப்பாடலுக்கு நடனம் ஆடிய வீடியோவை வெளியிட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் ஷாலு ஷம்மு இதனை வித்தியாசமாக எடுத்துக்கொண்டு தனது ஆண் நண்பர்களுடன் நடனமாடிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.