தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகராக பார்க்கப்படுபவர் அஜித் குமார். இவர் துணிவு படத்தின் வெற்றியை தொடர்ந்து “விடாமுயற்சி” படத்தில் நடிக்க இருக்கிறார். திரையுலகில் வெற்றி நடிகராக ஓடும் அஜித் நிஜ வாழ்க்கையில் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்கள் இருவருக்கும் தற்போது ஒரு மகள் மற்றும் மகன் இருக்கின்றனர். இந்த வயதிலேயும் அஜித் – ஷாலினிக்கு இடையே காதல், பாசம் குறையவில்லை அண்மையில் இவர் எடுத்துக் கொண்டார் புகைப்படங்களில் கூட அது தெரியும்..
அஜித் ஒரு பக்கம் தொடர்ந்து டாப் ஹீரோவாக ஓடிக் கொண்டிருக்க மறுப்பக்கம் ஷாலினி குடும்பத்தை அழகாக பார்த்துக் கொண்டிருக்கிறார். ஷாலினிக்கு திறமையும் அழகும் இருந்தாலும் அவர் திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிக்காமல் இருப்பதற்கு காரணம் அஜித் தானாம்..
அஜித் ஷாலினிடம் சொன்னது என்னவென்றால்.. நீ நடிக்க வேண்டாம் உனக்கு தேவையான எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன். சினிமா தொழில் சரிந்து விட்டாலும் வேறு ஏதேனும் ஒரு பிசினஸ் செய்து உன்னை நன்றாக பார்த்துக் கொள்வேன் எனவே நீ சினிமாவில் நடிக்க வேண்டாம் நாம் அமைதியான நல்ல வாழ்க்கையை வாழ்வோம்..
குடும்பம் தான் முக்கியம் என அஜித் கூற ஷாலினி அஜித் மீது இருந்த பிரியத்தால் ஒன்றும் சொல்லாமல் ஓகே சொல்லிவிட்டாராம் திருமணத்திற்கு பிறகு ஷாலினி பிரசன்னாவுக்கு ஜோடியாக “பிரியாத வரம் வேண்டும்” என்ற படத்தில் நடித்தார். அதுவே அவருக்கு கடைசி படம். இந்த படத்தின் நடிக்கும் போது கூட அஜித்திடம் அனுமதி வாங்கி தான் நடித்தார்.