சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதற்காக வீட்டை விட்டு ஓடி வந்த பிரபல நடிகை.! நிகழ்ச்சியான தகவல்.

shalini2
shalini2

தற்போது தென்னிந்திய சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருக்கும் ஏராளமான முன்னணி நடிகர் நடிகைகள் சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில் நடிப்பதற்கு பல எதிர்ப்புகளை சந்தித்து வந்திருப்பார்கள்.  அதோடு சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் நடிக்கக்கூடாது என்று பிரச்சினை செய்ததால் வீட்டை விட்டு ஓடி வந்தவர்களும் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள்.

அந்த வகையில் சினிமாவில் தற்பொழுது உள்ள ஏராளமான நடிகர் நடிகைகள் இந்த அனைத்து பிரச்சனைகளையும் சந்தித்து விட்டு தான் வந்துள்ளார்கள். இவ்வாறு சமீபத்தில் ஒரு பிரபல நடிகை பொது இடத்தில் என்னை சினிமாவில் நடிக்கக்கூடாது என்று கூறினார்கள் எனவே நான் வீட்டை விட்டு ஓடி வந்ததாக கூறியுள்ளார்.

அந்த நடிகையா வேறு யாருமில்லை தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்த வரும் ஷாலினி பாண்டே தான்.  இவர் விஜய் தேவர்கொண்டா நடிப்பில் வெளிவந்த அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார்.

இதன் மூலம் பிரபலமடைந்த இவருக்கு தெலுங்கு மட்டுமின்றி தமிழிலும் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தது அந்த வகையில் ஜீவா நடிப்பில் வெளிவந்த கொரில்லா,ஜிவி பிரகாஷ்வுடன் இணைந்து 100% காதல் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து இருந்தார்.

ஆனால் இவருக்கு தெலுங்கில் கிடைத்த அளவிற்கு தமிழில் பெரிதாக எந்த படங்களும் வெற்றி பெறவில்லை இதன் காரணமாக இவர் பாலிவுட் சினிமாவிற்கு சென்றுவிட்டார். அந்தவகையில் ஹிந்தியில் ரன்வீர் சிங்குடன் இணைந்து  ஜெயேஷ்பாய் சர்தார் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடந்தது.

எனவே அதில் பேசிய ஷாலினி பாண்டே என் அப்பா நான் இன்ஜினியரிங் படிக்க வேண்டும் என மிகவும் ஆசைப்பட்டார் எனவே நான் அவருக்காக படிக்க ஆரம்பித்தேன் ஒரு கட்டத்திற்கு பிறகு படிப்பு எனக்கு திருப்தி அளிக்கவில்லை, அது எனக்கானது அல்ல என்பதை உணர்ந்து நடிகையாக வேண்டும் என நான்கு வருடங்களாக அப்பாவை மாற்ற முயற்சி செய்தேன் ஆனால் கடைசி வரை அது நடக்கவில்லை இறுதியில் வேறு வழியில்லாமல் நடிப்பதற்காக வீட்டை விட்டு ஒதுங்கி விட்டேன் தற்போதுதான் பெற்றோர் என்னை பற்றி பெருமையாக நினைக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.