பேபி ஷாலினி பேபி ஷாமிலி எவ்வளவு அழகாக இருக்கிறார்கள் பார்த்தீர்களா.! சகோதரினா இப்படி இருக்கணும்

shamili
shamili

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளும்,  சகோதரிகளுமான ஷாலினி மற்றும் ஷாமிலி இருவர்களின் க்யூட்டான புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.  இவர்கள் இருவருமே குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ஏராளமான திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்தார்.

அந்த வகையில் விஜய்,அஜித்,மாதவன் உள்ளிட்ட ஏராளமான முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்து தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக ஒரு காலகட்டத்தில் கலக்கி வந்தவர் தான் நடிகை ஷாலினி.  இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், உள்ளிட்ட திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து பிரபலமடைந்தார்.

இப்படிப்பட்ட நிலையில் அமர்க்களம் திரைப்படத்தில் அஜித்துடன் இணைந்து நடிக்கும் பொழுது இவர்களுக்கிடையே காதல் ஏற்பட்டதால் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்திற்கு பிறகு ஷாலினி திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டார்.

இவர் எந்த அளவிற்கு பிரபலமடைந்துள்ளாரோ அதே அளவிற்கு இவரின் தங்கையான ஷாமிலியும் சினிமாவில் பிரபலமடைந்துள்ளார். இவரும் ஏராளமான திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். அந்த வகையில் அஞ்சலி திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதால் விருதுகளையும் பெற்றார்.

shalini and shamili
shalini and shamili

இவ்வாறு இவர் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமடைந்த இவர் ஒரு கட்டத்திற்கு பிறகு சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டு படிப்பில் கவனம் செலுத்தி வந்தார்.அந்த வகையில் சில வருடங்கள் கழித்து ஹீரோயினாக நடிக் ஆரம்பித்த இவருக்கு சொல்லுமளவிற்கு எந்த திரைப்படமும் பிரபலத்தை தரவில்லை.

shamili and shalini
shamili and shalini

இந்நிலையில் ஷாமிலியும் பெரிதாக சினிமாவில் கவனம் செலுத்தவில்லை. அந்த வகையில் தற்போது ஷாலினி மற்றும் ஷாலினி இவர்களின் அழகான புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.இதோ அந்த புகைப்படம்.

shalini and shamili 1
shalini and shamili 1