விஜய் டிவியில் கடந்த 5 வருடமாக ஒளிபரப்பாகி உலகம் முழுவதும் பிரபலமடைந்துள்ளது நிகழ்ச்சி தான் பிக்பாஸ். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் தான் நடிகை சாக்ஷி அகர்வால். இவர் இதற்கு முன்பு காலா, விசுவாசம் போன்ற இன்னும் சில திரைப்படங்களில் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
என்னதான் இவர் திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் இந்த திரைப்படம் இவரும் சொல்லும் அளவிற்கு பிரபலத்தை தரவில்லை பிக்பாஸ் நிகழ்ச்சி தான் சினிமா வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது அதனை சரியாக பயன்படுத்திக் கொண்ட இவருக்கு தற்போது முன்னணி ஹீரோயினாக சில திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
அதோடு தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் பல கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்ட வருவதால் தொடர்ந்து இவருக்கு ஏராளமான திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் பிரபல சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார்.
அதாவது பிக்பாஸ் சீசன் 3 இல் கலந்து கொண்ட பொழுது கவினுடன் காதல் வயப்பட்டார் என்பது நம் அனைவருக்கும் தெரியும் அதோடு இவர்கள் இப்படியே பல சர்ச்சைகளும் எழுந்தது இதனைத்தொடர்ந்து கவின் மற்றும் லாஸ்லியா இருவரும் காதலித்து வந்தனர்.
இது முடிந்த நிலையில் இந்தப் பேட்டியில் இவர் கல்லூரி படிக்கும் பொழுது மூன்று வருடங்களாக ஒருவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாகவும் காலேஜ் கேண்டீனில் ஒருவருக்கு ஒருவர் பார்த்து கொண்டதாகவும் கண்ணாலே பேசிக் கொள்வார்களாம் அதன்பிறகு 6 மணிக்கு ஃபோன் செய்கிறேன் என அவர் சொன்னால் ஷாக்ஷி 8 மணி வரைக்கும் காத்திருப்பான்.
அதோடு மட்டுமல்லாமல் கல்லூரியில் இருந்து மாதத்திற்கு ஒரு முறைதான் வெளியே வர முடியுமா எனவே அப்பொழுது காபி ஷாப்பில் அவருடன் நேருக்கு நேர் பேச வாய்ப்பு கிடைக்கும் என்று கூறினார். பிறகு அந்த நாட்கள் மறக்க முடியாத நாட்கள் என்றும் மிகவும் அழகாக நாட்கள் என்றும் கூறினார். இது எனது குடும்பத்திற்கும் தெரியும் நான் ஒருவரிடம் எந்த அளவிற்கு பழகுவேன் என அவர்களுக்கு தெரியும் எனவே என்னை நம்புகிறார்கள் என்று கூறியிருந்தார்.
தற்போது சாக்ஷி அகர்வால் பகீரா, புறவி, தி நைட்,குறுக்கு வழி, ஆயிரம் ஜன்னல்கள், நான் கடவுள் இல்லை போன்ற ஏராளமான திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.