ரஜினி நடிப்பில் வெளிவந்த காலா மற்றும் அஜித் நடிப்பில் வெளிவந்த விஸ்வாசம் உள்ளிட்ட திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் சாக்ஷி அகர்வால். மாடலிங்கா பணியாற்றி வந்த இவர் நடிப்பின் மீது அதிக ஆர்வம் இருந்ததால் திரைப்படங்களிலும் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கினார்.
அதன் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. இந்நிகழ்ச்சியின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார். அந்த வகையில் சமீபத்தில் ஆர்யா நடிப்பில் வெளிவந்த டெடி திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இத்திரைப்படத்தை தொடர்ந்து புரவி, சின்ட்ரெல்லா,அரண்மனை 3 உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தொடர்ந்து இவர் தனது சோஷியல் மீடியாவில் படு கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
ஒரு காலத்தில் கவர்ச்சியில் முன்னணி நடிகைகளாக வலம் வந்த சிலுக்கு சுமிதா, ஷில்பா போன்ற முன்னணி நடிகைகளையே ஓவர் டக் செய்துள்ளார். இவ்வாறு நாள்தோறும் புகைப்படங்கள், நடனம் ஆடும் வீடியோக்கள், உடற்பயிற்சி செய்யும் வீடியோக்கள் போன்றவற்றை விடுவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் பதில் அளித்து வருகிறார்.
அந்த வகையில் சில காலங்களுக்கு முன்பு இவர் தனது தொடையில் இருக்கும் டாட்டூ தெரியும்படி கவர்ச்சி போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி இருந்தார். அந்த டாட்டூ பிரெஞ்சு மொழியில் எழுதப்பட்டிருந்தது எனவே இதனை பார்த்த ரசிகர்கள் நீண்ட காலங்களாக அதனைப் பற்றி கேட்டு வந்தார்கள்.
அதற்கு பதிலளிக்கும் வகையில் சமீபத்தில் சாக்ஷி அகர்வால் அது பிரஞ்சு மொழியில் La vie est belle என்று கூறப்படும் அதற்கு தமிழில் லைஃப் இஸ் பியூட்டிஃபுல் என்ற பொருள் என்று கூறி உள்ளார் சாக்ஷி அகர்வால்.