கழுத்தில் தாலி, நெத்தியில் குங்குமம் என்று மணப்பெண் கோலத்தில் புகைப்படத்தை வெளியிட்ட சாக்ஷி அகர்வால்.! அதிர்ந்து போன ரசிகர்கள்

shakshi-agarwal-09
shakshi-agarwal-09

ரஜினி நடிப்பில் வெளிவந்த காலா திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர் சாக்ஷி அகர்வால். இத்திரைப்படத்தை தொடர்ந்து அஜித் நடிப்பில் வெளிவந்த விஸ்வாசம் திரைப்படத்தில் நடித்திருந்தார். இவர் மாடலிங்காகத் தான் தனது கேரியரை ஆரம்பித்துள்ளார்.

அதன்பிறகு விளம்பர படங்கள் போன்றவற்றில் நடித்து வந்த இவருக்கு காலா திரை படத்தில் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.இதனைத் தொடர்ந்து சில திரைப்படங்களில் சின்ன சின்ன ரோலில் நடித்து வந்துள்ளார். என்னதான் இவர் சில திரைப்படங்களில் நடித்து வந்தாலும் எந்த திரைப்படமும் சொல்லும் அளவிற்கு பிரபலத்தை தரவில்லை.

இப்படிப்பட்ட நிலையில்தான் இவருக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது .அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 3-யில் கலந்துகொண்டு பட்டி தொட்டியெங்கும் பிரபலமடைந்தார்.இந்நிகழ்ச்சியிலிருந்து இவர் பாதியிலேயே வெளியேறி இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது மட்டுமல்லாமல் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

அந்த வகையில் சமீபத்தில் ஆர்யா நடிப்பில் வெளிவந்த டெடி திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படத்தை தொடர்ந்து இவர் கதாநாயகியாகவும், துணை நடிகையாகவும்  சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். விரைவில் இவர் நடித்து வரும் திரைப்படங்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தற்பொழுது லாக் டவுன் என்பதால் படப்பிடிப்புகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. எனவே வீட்டிலேயே இருந்து வரும் சாக்ஷி அகர்வால் தொடர்ந்து தனது படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வெறுப்பேற்றிய அதோடு மட்டுமல்லாமல் கவர்ச்சி நடிகையாகவே மாறிவிட்டார் என்று தான் கூற வேண்டும்.

shakshi agarwal 05
shakshi agarwal 05

இவ்வாறு தனது கவர்ச்சியால் இணையதளத்தில் கதிகலங்க வைத்து வந்த இவர் தற்போது முழுவதுமாக மணப்பெண் போன்று தாலி, பட்டுப்புடவை, தலை நிறைய மல்லிகைப் பூ போன்றவற்றை அணிந்து கொண்டு கல்யாணமான பெண் போல் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.  இதனைப் பார்த்த ரசிகர்கள் பலர் இவருக்கு திருமணமாகி விட்டதா என்று கூறி வருகிறார்கள்.இதோ அந்த புகைப்படம்.