Actress Shakeela: நடிகை ஷகிலா பிக் பாஸ் வீட்டில் தனக்கு எத்தனை சிகரெட் கொடுத்தார்கள் என்பது குறித்து ஓபனாக கூறியிருக்கும் தகவல் வைரலாகி வருகிறது. ஐட்டம் நடிகையாக சினிமாவில் பிரபலமான நடிகை ஷகிலா தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழி 250க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவர் ஒரு ஐட்டம் நடிகை என்பது மட்டுமே அனைவரும் மனதிலும் பதிந்திருந்தது ஆனால் நானும் ஒரு மனுஷி தான் என்பதை சின்னத்திரை ஷோக்கள் மூலம் புரிய வைத்துள்ளார். அப்படி ஐட்டம் நடிகை ஷகிலா என்பது மாரி ஷகிலா அம்மா என அனைவரும் அழைக்க ஆரம்பித்துள்ளனர்.
திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காததனால் சினிமாவை விட்டு விலகி இருந்த ஷகிலா கன்னடத்தில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 2வில் போட்டியாளராக கலந்துக் கொண்டார். இதனை அடுத்து விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு பெற்றார்.
இந்நிகழ்ச்சியில் புகழ், பாலா ஆகியோர்களுடன் இணைந்து ஷகிலா செய்த சேட்டைகள் ரசிகர்களை கவர்ந்தது. மேலும் ஷகிலாவை ஷகிலா அம்மா என பாலா, புகழ் அழைக்க ஆரம்பிக்க தமிழகமே தற்பொழுது இவரை ஷகிலா அம்மாவாக கொண்டாடி வருகின்றனர்.
சமீப காலங்களாக ஏராளமான பிரபலங்களை நேர்காணலில் பேட்டி எடுத்து வருகிறார் அதோடு மட்டுமல்லாமல் இவரும் பல பேட்டி அளித்துள்ளார். அந்த வகையில் பேட்டி ஒன்றில் நான் அதிகமாக சிகரெட் குடிப்பேன் ஆனால் பிக் பாஸ் வீட்டிற்கு போன பிறகு குறைந்துவிட்டது ஒரு நாளைக்கு 10 சிகரெட் தான் கொடுப்பார்கள் அதில் மூன்று பேருக்கு கொடுக்க வேண்டியது இருக்கும்.
எனவே இதனால் நான் சிகரெட் குடிப்பது குறைந்துவிட்டது மறுபடியும் கேட்டால் கொடுப்பாங்க. பிறகு எனக்கு சிகரெட் வேணும் தந்தா தான் நான் தூங்குவேன் இல்லைன்னா இப்படி தான் உட்கார்ந்திருப்பேன் என்று சொல்லி விடுவேன் அதன் பிறகு மூணு, அஞ்சு எடுத்துட்டு வந்து தருவாங்க என்று கூறியுள்ளார்.