பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியானது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சியாக அமைந்து விட்டது அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஷகிலா மீளா என்பவரைத் தத்தெடுத்து வளர்த்து வந்தார்.
மீளா முதன் முதலில் ஆடை வடிவமைப்பாளராக இருந்து வந்தவர் அதன்பிறகு ஷகிலா உடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார் அதுமட்டுமில்லாமல் தங்கள் வாழ்க்கைப் போராட்டத்தில் ஷகிலா மற்றும் மீளா ஆகிய இருவரும் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருந்து வந்துள்ளார்.
இதனை தொடர்ந்து ரசிகர்களுக்கு மீளாவை பற்றி தெரிந்துகொள்ள ஆர்வம் அதிகமாகிவிட்டது அந்தவகையில் மீளா யார் என்று ரசிகர்கள் கேட்க ஆரம்பித்த பிறகு அதற்கு நடிகை ஷகிலா பதிலளித்தார் அவர் கூறியது என்னவென்றால் மீளா என்னுடைய மகள் என்று கூறியது மட்டும் இல்லாமல் இவர் இல்லாவிட்டால் என் வாழ்க்கையில் எதுவும் கிடையாது என்று கூறினார்.
இதனை தொடர்ந்து யூடியூப் சேனல் மீளாவை பேட்டி எடுத்தார்கள் அப்பொழுது அவரைப் பற்றியும் அவருடைய திருநங்கை வாழ்க்கை பற்றியும் அனைவருக்கும் தெரியவந்தது அதுமட்டுமில்லாமல் மீளா பிக்பாஸ் நிகழ்ச்சி 5 வது சீசனில் கலந்து கொள்ள போகிறார் என நினைத்த நிலையில் அவருக்கு மாறாக நமிதா மாரிமுத்து என்ற திருநங்கை கலந்து கொண்டார்.
இந்நிலையில் மீளா பேபி கேர்ள் என்ற யூட்யூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார் அந்த வகையில் தன்னுடைய சேனலில் அடிக்கடி வீடியோக்களும் புகைப்படமும் வெளியிட்டு வருவது வழக்கம். இந்நிலையில் மீளா கர்ப்பமாக இருந்தால் எப்படி இருக்கும் என்ற வகையில் ஒரு போட்டோ ஷூட் எடுத்துள்ளார்கள்.
இவ்வாறு எடுத்த போட்டோ ஷூட் வீடியோவானது சமூக வலைதளப் பக்கத்தில் மிகவும் வைரலாக பரவியதுமட்டுமில்லாமல் ரசிகர்களை கண் கலங்க செய்துவிட்டது.