2015ஆம் ஆண்டு வெளிவந்த அகில் என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமாகி தற்போது வரையிலும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருபவர் நடிகை சாய்ஷா. இவர் தெலுங்கு, இந்தி, தமிழ் ஆகிய மொழிகளில் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்தார்.
இவரின் சிறந்த நடிப்புத் திறமையினால் பாலிவுட்டில் மிகப்பெரிய ஒரு அந்தஸ்து கிடைத்தது. இவ்வாறு ஆரம்ப காலகட்டத்தில் இந்தி, தெலுங்கு என தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் 2017ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த வனமகன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர்.
பிறகு கடைக்குட்டி சிங்கம், ஜிங்கா, கஜினிகாந்த், காப்பான் என தொடர்ந்து தமிழ் திரைப்படங்களில் பிஸியாக இருந்தார் இவ்வாறு ரஜினிகாந்த் திரைப்படத்தில் ஆர்யாவிற்கு ஜோடியாக நடித்துக் கொண்டிருக்கும் பொழுது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது பிறகு சில வருடங்கள் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டவர்கள்.
திருமணத்திற்கு பிறகு சாயிஷா திரைப்படங்களில் பெரிதாக கவனம் செலுத்தாமல் தனது குடும்பப் பணிகளை பார்த்து வந்தார். இப்படிப்பட்ட நிலையில் கர்ப்பமாக இருந்த இவருக்கு சில மாதங்களுக்கு முன்பு குழந்தை பிறந்தது எனவே தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வந்த இவர் சில மாதங்களாக இன்ஸ்டாகிராம் பக்கமே தலை காட்டாமல் இருந்து வந்தார்.
தற்பொழுது தனது கணவருடன் பீச்சீற்கு சென்றுள்ளார் அங்கு பீச் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் குழந்தை பிறந்த பிறகும் அழகு குறையாமல் ஸ்லிம்மாக இருக்கிறீர்கள் என்று கமெண்ட் செய்து வருகின்றவர்கள். இதோ அந்த புகைப்படம்.