நடிகை சாயிஷா தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் அறிமுகமாகி பின் தமிழ் சினிமா பக்கம் கால்தடம் பதித்தார் முதல் படமே நடிகர் ஜெயம் ரவியுடன் கைகொடுத்து வனமகன் என்ற திரைப்படத்தில் நடிக்கிறார். இப்படம் சிறப்பான வெற்றியை பெற்றதன் காரணமாக அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைத்தன.
அந்த வகையில் கடைக்குட்டி சிங்கம், ஜூங்கா, காப்பான், கஜினிகாந்த் போன்ற பல டாப் நடிகர் படங்களில் நடித்து அசத்தினார். நடிகர் ஆர்யாவுடன் சாயிஷா இணைந்து கஜினிகாந்த் படத்தில் நடித்தார். தொடர்ந்து நடிகர் சாயிஷா காப்பான் திரைப்படத்தில் சும்மா சற்று வந்து போவதைத் தவிர ஆர்யாவுடன் அந்த அளவிற்கு பெரிதாக நடித்திருக்கவில்லை.
இதுவரை இருவரும் இணைந்து நடித்த படங்கள் ஓரளவு நல்ல வெற்றியை ருசித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவில் தொடர் வெற்றி படங்களை கொடுத்து ஓடிக்கொண்டு இருந்த இவர் மிகவும் பிடித்த நடிகர் ஆர்யாவை காதலித்து பின் ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்கள் இருவருக்கும் ஒரு பெண் குழந்தை இருக்கிறது.
அதன் பிறகு சிறிது இடைவெளி விட்டு சாயிஷா தற்போது ஒரு வழியாக படங்களில் நடிக்க அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார். இருப்பினும் சொல்லிக்கொள்ளும்படி வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் தனது உடலை அழகாக வைத்து அசத்தி வருகிறார்.மீண்டும் தனது அழகை வெளிக்காட்டும் வகையில் சூப்பரான புகைப்படங்களை வெளியிட்டு அசத்தி வருகிறார்.
இப்பொழுது சற்று உடல் எடையை ஏற்றி பிங்க் கலர் டிரஸ் மொத்த அழகையும் எடுப்பாக காட்டி இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் இளசுகளை வர்ணிக்க வைத்துள்ளது. இதோ நீங்களே பாருங்கள் நடிகை சாயிஷாவின் அந்த அழகிய புகைப்படத்தை..