பொதுவாக சினிமாவில் உள்ள ஏராளமான நடிகர் நடிகைகள் இரண்டு மூன்று திருமணம் செய்து கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் பிரபல முன்னணி நடிகரின் முன்னாள் மனைவி பணம் சுத்தமாக இல்லாமல் கஷ்டப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
அதாவது தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகராக அறிமுகமான காலகட்டத்தில் இருந்து தற்போது வரையிலும் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் கமலஹாசன். நடிகர் கமலின் முதல் மனைவி சரிகா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
சரிகா மற்றும் கமலஹாசன் இருவரும் ஆறு வருடங்கள் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். பிறகு இவர்களுக்கிடயே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். இவர்களுக்குப் பிறந்தவர்கள் தான் நடிகை ஸ்ருதிஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் தற்போது இவர்கள் சினிமாவில் முன்னணி நடிகைகளாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் சரிகா அளித்த பேட்டி ஒன்றில் நான் கொரோனா லாக் டவுன் காலத்தில் பணம் இல்லாமல் அதிகம் கஷ்டப்பட்டதாக கூறியுள்ளார். நான் சினிமாவில் நடிகைகளாக நடிப்பதை நிறுத்தி மேடை நாடகங்களில் நடித்தேன் ஒரு வருடம் மட்டும் இப்படி பிரேக் எடுத்தேன் ஆனால் கொரோனா லாக் டவுன் காரணமாக ஐந்து ஆண்டுகளாக மாறிவிட்டது.
நாடகங்களில் நடித்தால் எனக்கு ஒரு நாளைக்கு 2000 முதல் 2500 ரூபாய் வரை மட்டுமே கிடைக்கும் ஆனால் ஒரு கட்டத்தில் பணம் சுத்தமாக காலியாகி விட்டதால் பணம் இல்லாமல் தவித்தேன் என அவர் கூறியுள்ளார்.