Sanghavi : 90 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சங்கீதா. இவர் முதிலில் அமராவதி படத்தில் நடித்து அறிமுகமானார். அதனை தொடர்ந்து ரஜினி, விஜயகாந்த், கமல், சரத்குமார், அஜித், விஜய் போன்ற நடிகர்களுடன் நடித்த தனது மார்க்கெட்டை உயர்த்துக் கொண்டார்.
குறிப்பாக விஜய்யுடன் சங்கவி அடுத்தடுத்த படம் பண்ணினார் அந்த படங்கள் ஹிட் அடித்தன. அந்த நேரத்தில் இருவரும் காதலிப்பதாக கிசு கிசுக்கள் வெளியாகின ஒரு கட்டத்தில் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக பேச்சுக்கள் பெரிதாக வெடித்தது.
அதன் பிறகு சங்கவி – விஜய் சேர்ந்து படம் பண்ணவில்லை. மற்ற நடிகர்களுடன் படம் பண்ணிவந்த இவர் தமிழையும் தாண்டி தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில் நல்ல படங்களில் நடித்து பெயரை எடுத்தார். இப்படி ஓடிக் கொண்டிருந்த சங்கவி 38 வயதில் திருமணம் செய்து கொண்டார்.
பெங்களூருவை சேர்ந்த பிரபல தொழிலதிபர் வெங்கடேசன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். 42 வயதில் பெண் குழந்தையை பெற்றெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.திருமணத்திற்கு பிறகு சினிமாவில் தலை காட்டாமல் தனது குடும்பத்துடன் வாழ்க்கையை வாழ்ந்து வரும் நடிகை சங்கவி..
சொத்து மதிப்பு குறித்து நமக்கு தகவல் கிடைத்திருக்கிறது அதன்படி பார்க்கையில் இன்று 46 வது பிறந்தநாளை கொண்டாடும் அவருக்கு பல சொகுசு கார்கள் இருக்கிறது. அதிகபட்சம் இவருடைய சொத்து மதிப்பு சுமார் 10 கோடி ரூபாய் வரை இருக்கும் என கூறப்படுகிறது.