இரண்டு முறை கருகலைப்பு.. நண்பர்கள் கேட்ட கேள்வி.. விஜய் பட நடிகை சங்கவி வாழ்க்கையில் இத்தனை சோகங்களா..

actress sanghavi

actress sanghavi: சினிமாவைப் பொறுத்தவரை முன்னணி நடிகைகளாக வலம் வருபவர்கள் ஏராளமான கிசுகிசுப்பில் சிக்குவது வழக்கம் அப்படி நடிகை சங்கவி தன்னுடைய வாழ்க்கையில் நடந்த ஏராளமான நிகழ்வுகள் குறித்து சமீபத்தில் பேட்டி அளித்துள்ளார். 90 காலகட்டத்தில் அஜித், விஜய் என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களின் ஃபேவரிட் நடிகையாக வலம் வந்தார்.

ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொண்டு செட்டிலான இவருக்கு குழந்தையே இல்லை எனவே இதனால் தான் பட்ட வேதனைகள் குறித்து மனம் திறந்து பேசி உள்ளார். கர்நாடகாவை சேர்ந்த சங்கவி தமிழில் வெளியான அமராவதி படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார். இப்படத்தில் நடிகர் அஜித்குமாருடன் இணைந்து நடித்திருந்தார் இவ்வாறு இப்படம் சூப்பர் ஹிட் வெற்றினை பெற்றதால் தொடர்ந்து விஜய்யுடன் இணைந்து ரசிகன் படத்தில் நடித்திருந்தார்.

ரெக்கார்ட் பிரேக்கர் இல்ல ரெகார்ட் கிரியேட்டர் என நிருபித்த விஜய்.! லியோ அதிகாரபூர்வ வசூல் அறிவிப்பு.!

மேலும் நாட்டாமை, கட்டுமரக்காரன், லக்கி மேன், விஷ்ணு, கோவை மாப்பிள்ளை உள்ளிட்ட அடுத்தடுத்த ஹிட் படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். மேலும் சின்னத்திரையில் கோகுலத்தில் சீதை, சாவித்திரி, கால பைரவா போன்ற சில சீரியல்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தமிழ் மட்டுமல்லாமல் கனடா, மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் நடித்து வந்த சங்கவி தாமதமாக திருமணம் செய்து கொண்டார்.

அப்படி கடந்த 2016ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஐடி நிபுணரான வெங்கடேஷை திருமணம் செய்து கொண்டார் திருமணத்திற்கு குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என மிகவும் ஆசையாக இருந்துள்ளார். ஆனால் முதல்முறையாக கர்ப்பமாக இருந்த சங்கவி மருத்துவரை சென்று பார்க்கும் பொழுது ஏழாவது வாரத்தில் இதயத்துடிப்பு நல்லா இருக்கு என்று சொன்ன மருத்துவர்கள் எட்டாவது வாரத்தில் இதய துடிப்பு இல்லை என்று ஆபரேஷன் செய்ய வேண்டும் என கூறிவிட்டார்களாம்.

ரச்சிதா மகாலட்சுமியின் தந்தை மரணம்.. பிரிந்து வாடும் குடும்பத்தினர்கள்

எனவே அப்பொழுது சங்கவி ரொம்பவே உடைந்து போய்விட்டாராம் ரொம்ப ஆசையாக எதிர்பார்த்து இப்படி ஆகிவிட்டது என்று கஷ்டப்பட்டு இருக்கிறார். அதோடு இதற்கு காரணம் நம்மலாக தான் இருக்குமோ? நம்ம செஞ்ச செயலால்தான் இருக்குமோ அப்படி செஞ்சிருக்க கூடாது இப்படி செஞ்சிருக்க கூடாது என்று பெரிய குழப்பத்தில் இருந்து உள்ளார். மேலும் அந்த நேரத்தில் கூட இருந்தவர்களும் நீ இதை செய்தது தப்பு இது செய்தது தப்பு என இவரைத்தான் குறை சொல்லி உள்ளனர்.

actress sanghavi
actress sanghavi

பிறகு இரண்டாவது முறையும் கர்ப்பமாக அப்பொழுதும் ஏழாவது வாரம் வரை எந்த பிரச்சனையும் இல்லாமல் இருந்த நிலையில் எட்டாவது வாரத்தில் முதல் தடவை போலவே பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது. எனவே இதனால் இரண்டாவது குழந்தையும் இப்படி ஆனதால் சங்கவி வீட்டிலிருந்து இடத்தை விட்டு எழுந்திருக்கக் கூட இல்லையாம் ஒருவேளை செய்யாமல் அப்படியே இருந்திருக்கிறார்.

ஆனால் அதுவும் தாங்கவில்லை என்று ரொம்ப மனது உடைந்து போனாராம். அப்பொழுது அவருடைய கணவர் தான் சங்கவிக்கு ஆறுதலாக இருந்துள்ளார் இதனை அடுத்து தான் சங்கவிக்கு 2020இல் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. அந்த குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை அடிக்கடி சங்கவி தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார்.