விஜய் படத்தில் நடிப்பதற்காக அஜித் படத்தை நிராகரித்த நடிகை.! சர்ச்சையில் சிக்கி சின்னா பின்னமான சம்பவம்..

actress sangeetha
actress sangeetha

Actress Sangeetha:  90களில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை சங்கீதா அஜித்தின் சூப்பர் ஹிட் பட வாய்ப்பை தவற விட்டுவிட்டதாக சமீப பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் குடும்ப பாங்கான கதையம்சம் உள்ள திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர் தான் நடிகை சங்கீதா.

இவர் 1978ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவின் மூலம் நடிக்க தொடர்ந்தார் அதன் பிறகு என் ரத்தத்தின் ரத்தமே என்ற படத்தில் குணசத்திர கேரக்டரில் நடித்து பிரபலமானார். இதன் மூலம் இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது அப்படி இதய வாசல், நாட்டுக்கொரு நல்லவன், வசந்த மலர், சாமுண்டி, தாலாட்டு, கேப்டன் மகள், மகாநதி உள்ளிட்ட பல படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார்.

இதனை அடுத்து ஹீரோயினாக நடிப்பதற்கான வாய்ப்பையும் பெற்றார் அப்படி விஜய்க்கு ஜோடியாக பூவே உனக்காக திரைப்படத்தில் நடித்திருந்தார். அஜித்தின் காதல் கோட்டை படத்திலும் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது ஆனால் விஜய்யின் பூவே உனக்காக மற்றும் மேலும் சில மலையாள திரைப்படங்களிலும் நடித்து வந்த காரணத்தினால் அஜித் உடன் நடிக்க மறுத்து விட்டாராம். மேலும் பூவே உனக்காக படத்தில் விஜய்யுடன் இணைந்து நடிக்கும் பொழுது இவர்கள் இருவரும் காதலிப்பதாக சர்ச்சை எழுந்தது.

காதல் கோட்டை சூப்பர் ஹிட் வெற்றினை பெற்றதால் தற்பொழுது வரையிலும் பட வாய்ப்பு மிஸ் செய்து விட்டதாக ஃபீல் பண்ணி வருகிறாராம். இந்த தகவலை சமீப பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். நடிகை சங்கீதா 2000ஆம் ஆண்டு இயக்குனர் சரவணன் என்பவரை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகினார். 23 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் மலையாள மாற்றம் தமிழ் படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.