actress sangavi latest news: தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்துடன் கெத்தாக வலம் வருபவர் தான் தல அஜித்.இந்நிலையில் தல அஜித்தின் திரைப்படத்தில் நடித்த நடிகை ஒருவரை பற்றி பிரபல பத்திரிகையாளர் கிண்டலாகப் பேசி உள்ளார்கள். ஆனால் அவரோ தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
தல அஜித் ஆரம்பத்தில் சொதப்பலான திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தாலும் அதன்பிறகு இவர் நடித்த திரைப்படங்கள் அனைத்துமே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து விட்டது. அதுமட்டுமில்லாமல் ஆரம்பகாலத்தில் இவருடைய திரைப்படங்கள் தோல்வியை சந்தித்தாலும் அது பெருமளவிற்கு விமர்சனத்தை ஏற்படுத்தியது கிடையாது.
இந்நிலையில் அவருடன் திரைப்படத்தில் கதாநாயகியாக ஜோடி போட்டு நடித்த சங்கவியை பற்றி பிரபல பத்திரிகையாளர்கள் கேவலமாக எழுதியுள்ளதாக சமீப பேட்டி ஒன்றில் அவர் கூரியிருந்தார் அதுமட்டுமில்லாமல் இவர்கள் இப்படி எழுதியது அவருடைய மனதை பெரிதும் பாதித்ததாக கூறியுள்ளார்.
சங்கவி அஜீத்துடன் இணைந்து நடித்து வெளிவந்த திரைப்படம் தான் அமராவதி இத்திரைப்படம் 1993 ஆம் ஆண்டு வெளியானது. மேலும் இத் திரைப்படமானது மாபெரும் வெற்றி கிடைக்காவிட்டாலும் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது இந்நிலையில் அந்த திரைப்படத்தில் சங்கவியை பார்த்த பிரபல பத்திரிகையாளர் இந்த மூஞ்சிக்கு நடிப்பு வரல இது ஒரு செத்த மூஞ்சி என கமெண்ட் செய்திருந்தார்.
ஆனால் அதன் பிறகு சுமார் ஐந்து வருடத்தில் தமிழ் சினிமாவில் மிகப் பெரிய நடிகையாக வளர்ந்தது மட்டுமல்லாமல் நம்பர் ஒன் நடிகையாக திகழ்ந்து வந்தார். என பத்திரிகையாளர் வாயால் சொல்லும்படி வளர்ந்துள்ளார் என்பதை கூறி பெருமிதம் அடைந்தார்.