actress sanam shetty loversday video fans comments: தற்போது விஜய் டிவியில் மிக பிரம்மாண்டமாக வெற்றி நடை போட்டு வரும் ஒரு நிகழ்ச்சி என்னவென்றால் அது பிக்பாஸ் நிகழ்ச்சி தான் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ் மொழி மட்டும் அல்லாமல் பிற மொழிகளிலும் ஒளிபரப்பாகி வருகிறது.
மேலும் விஜய் டிவியில் இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருபவர் உலகநாயகன் கமலஹாசன். இதுவரை தமிழில் மூன்று சீசன்கள் முடிவடைந்த இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் மிக விறுவிறுப்பாக சென்றது அது மட்டுமில்லாமல் இதில் போட்டியாளராக பல்வேறு பிரபலங்களும் கலந்துள்ளார்கள்.
இதில் சனம் ஷெட்டிக்கும் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார் இவர் ஒரு நடிகை மட்டும் அல்லாமல் மாடல் அழகியும் ஆவார். இந்த நான்காவது சீசனில் பல்வேறு போட்டியாளர்கள் வெளியேறியபோது கண்டுக்காமல் இருந்த ரசிகர்கள் சனம் செட்டி வெளியேறிய பொழுது பெரும் ஆர்ப்பாட்டத்தை ஏற்படுத்திவிட்டார்கள்.
பொதுவாக பிரபலமாக இருக்கும் நடிகைகள் புகைப்படங்கள் வெளியீடுவது வீடியோ வெளியிடுவது அல்லது கருத்து தெரிவிப்பது போன்ற பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் ரசிகர் ஒருவர் சனம் செட்டி வெளியிட்ட வீடியோவிற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
அதாவது வருகின்ற காதலர் தினத்தை முன்னிட்டு ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தார் அப்போது ஒரு சிறிய பொருளை கையில் வைத்துக் கொண்டு அதை விளம்பரம் செய்துள்ள இந்த வீடியோவை பார்த்த ரசிகர் ஒருவர் நாங்கள் உங்களை வெறுப்பதற்கு இதுதான் காரணம் இவ்வாறு விளம்பரம் செய்யும் உங்களுக்கு ஓட்டு அளித்ததைக் கண்டு வருத்தப் படுகிறேன் என்று கூறியுள்ளார்.
இதற்கு சரியான பதில் படுத்த சனம் செட்டி உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி நான் வைத்திருக்கும் அந்த பொருள் பயன்படுத்திய பிறகு அது உள்ளூர் ஆதாரங்களுக்கு தான் மதிப்பு அதிகம் அதனால் தான் அதை புரோமோஷன் செய்துள்ளேன் என்று கூறி சரியான நெத்தியடி பதில் அளித்துள்ளார்.