நடிகர் சூர்யாவின் பிறந்த நாளை கொண்டாடும் வகையில் பல்வேறு நடிகர்களும் நடிகைகளும் சூர்யாவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிக்கும் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட வெளியிட்டுள்ளார்கள்.
இவ்வாறு வெளிவந்த போஸ்டர் ஆனது சமூக வலைதளப் பக்கத்தில் மிக வைரலாக பரவி வருகிறது.சூர்யா நடிக்கும் இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தான் தயாரிக்க உள்ளதாம் மேலும் இப்படத்தை பாண்டிராஜ் இயக்கி வருகிறார்.
இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படமானது சூர்யாவின் 40வது திரைப்படமாக கருதப்படுகிறது மேலும் இந்த திரைப்படத்திற்கு டைட்டிலாக எதற்கும் துணிந்தவன் என்று பெயர் வைத்து தீம் மியூசிக் உடன் இந்த திரைப்படத்தின் போஸ்டர் போஸ்டர் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் பிரபல பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற சனம் செட்டி அவர்கள் சூர்யாவிற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் சூர்யாவுடன் எடுத்த புகைப்படத்தை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இவ்வாறு அவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த விஜய் ரசிகர் ஒருவர் சனம் ஷெட்டியை விட சூர்யா மிகவும் குள்ளமாக இருப்பதை சுட்டிக் காட்டியிருந்தார். இதை பார்த்த சனம் செட்டி உயரத்தை பார்த்து ஒருவரை எடை போட முடியாது அவருடைய திறமை எவ்வளவு பெரியது என்பது உங்களுக்கு தெரியுமா என பதிலடி கொடுத்துள்ளார்.
இதைப் பார்த்த சூர்யா ரசிகர்கள் சும்மா விடுவார்களா உடனே அந்த ரசிகரை கண்டமேனிக்கு கெட்ட வார்த்தைகளை உபயோகித்து திட்டிவருகிறார்கள். இவ்வாறு ரசிகர்கள் வெளியிட்ட பதிவானது சமூக வலைதள பக்கத்தில் மிக வைரலாக பரவி வருகிறது.
அதுமட்டுமில்லாமல் சனம் செட்டி தற்போது எந்த ஒரு பட வாய்ப்பும் இல்லாமல் தடுமாறி வருகிறார் இந்நிலையில் விரைவில் அவருக்கு பட வாய்ப்பு வரும் என எதிர்பார்க்கபடுகிறது.