நரை முடியில் இரட்டை ஜடை..! குடும்பம் குட்டியாக நடிகை சமீரா ரெட்டி வெளியிட்ட புகைப்படம்..!

sameera-reddy

actress sameera reddy latest image: சினிமாவில் சூர்யா நடிப்பில் வெளிவந்த வாரணம் ஆயிரம் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக திரையுலகில் அறிமுகமானவர் தான் நடிகை சமீரா ரெட்டி.  இவர் இந்த திரைப்படத்தில் நடித்த கதாபாத்திரம் ஆனது ரசிகர்களின் மனதை நெகிழ வைத்து விட்டது.

இதன் காரணமாக சமீரா ரெட்டிக்கு தமிழ் சினிமாவில் ஏகத்திற்கு ரசிகர் கூட்டம் பெருகியது மட்டுமல்லாமல் அடுத்தடுத்த பட வாய்ப்புகளையும் எளிதில் பெற ஆரம்பித்து விட்டார்.மேலும் இந்தத் திரைப்படத்திற்காக அவருக்கு விஜய் அவார்ட்ஸ் விருது கூட கிடைத்தன.

சூர்யாவுடன் நடித்த இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகை சமீரா ரெட்டி தல அஜித் நடிப்பில் வெளிவந்த அசல், நடுநிசி நாய்கள் வேட்டை போன்ற பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து தன்னுடைய மவுசை அதிகரித்துக் கொண்டார்.

என்னதான் இவர் பல திரைப்படத்தில் நடித்து இருந்தாலும் இவரை பார்த்த உடனே அனைவருக்கும் ஞாபகம் வருவது என்னவென்றால் வாரணம் ஆயிரம் திரைப்படம் தான்.இவ்வாறு பிரபலமான நமது நடிகை கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இவ்வாறு திருமணத்திற்கு பிறகு ஒரு குழந்தைக்கு தாயான நமது நடிகை ஆரம்பத்தில் தமிழ் மொழி திரைப்படங்கள் மட்டும் இல்லாமல் தெலுங்கு மலையாளம் ஹிந்தி போன்ற பல்வேறு மொழிகளிலும் தன்னுடைய நடிப்பு திறனை வெளிக்காட்டி உள்ளார்.

sameera reddy
sameera reddy

தற்போது வயது முதிர்ந்த தோற்றத்தில் இருக்கும் சமீரா ரெட்டிக்கு 42 வயது ஆகிறது இந்நிலையில் தன்னுடைய நரை முடியுடன் வெளியிட்ட புகைப்படமானது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.