தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை சமந்தா சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல இரண்டு காதல் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவ்வாறு இந்த திரைப்படத்தில் நடிகை சமந்தாவின் காட்சிகள் முழுவதுமாக முடிவடைந்த நிலையில்.
பல்வேறு இயக்குனர்களும் சமந்தாவிடம் கதை சொல்ல காத்துக் கொண்டிருக்கிறார்களாம். அந்த வகையில் ஹீரோக்களுடன் ரொமான்ஸ் செய்யும் திரைப்படங்களை விட கதைக்கு முக்கியத்துவம் உள்ள திரை படங்களில் மட்டுமே நடிக்க ஆர்வமாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து தற்போது பல்வேறு இயக்குனர்களும் நல்ல கதையம்சமுள்ள கதையை சமந்தாவிடம் கூறிவருகிறார்கள். இந்நிலையில் நாக சைதன்யாவை நடிகை சமந்தா சமீபத்தில் தான் விவாகரத்து செய்யப் போவதாக கூறியிருந்தார்.
அந்த வகையில் தற்போது அவருக்கு படவாய்ப்புகளும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்நிலையில் நடிகை சமந்தா சுமார் மூன்று திரைப்படங்களில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படத்தில் நடிக்க உள்ளாராம். மேலும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக ஆரம்பிக்க போவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
இவ்வாறு சமந்தா சமீபத்தில் நடித்த அனைத்து திரைப்படங்களும் கவர்ச்சி அதிகமாக உள்ள திரைப்படங்களாக அமைந்தது இதன் காரணமாக தான் விவாகரத்து அவருக்கு ஏற்பட்டது என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் மேலும் இந்த தவறு செய்யக்கூடாது என்ற காரணத்தினால் சமந்தா இப்படி கதையம்சம் உள்ள திரைப்படத்தில் நடித்து வருகிறார் என பலரும் கூறி வருகிறார்கள்.
இது போதாது என்று தற்போது நடிகை சமந்தா தொழில் துறைகளிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறாராம். இதன் மூலம் அதிகம் சம்பாதிக்கலாம் என அனைவரும் நினைத்த நிலையில் தற்போது சமந்தா முழுமூச்சாக சினிமாவில் இறங்கி விளையாட ஆரம்பித்து விட்டாராம்.