Actress Samantha: நடிகை சமந்தா மயோசிடிஸ் நோய் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருக்கும் நிலையில் அங்கு எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டிருக்கும் சமந்தா நடிப்பில் குஷி திரைப்படம் வெளியாக இருக்கிறது.
இந்த படத்தினை சிவா நிர்வாணா இயக்க விஜய் தேவரகொண்டனுக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். இந்த படத்தின் சூட்டிங் முடிந்திருக்கும் நிலையில் ரிலீஸ்க்கு தயாராக உள்ளது. அந்த வகையில் வருகின்ற செப்டம்பர் 1ஆம் தேதியன்று உலகம் முழுவதும் குஷி திரைப்படம் வெளியாக இருப்பதனால் பட குழுவினர்கள் போஸ்ட் ப்ரோமோஷன் பணிகளில் தீவிரம் காமித்து வருகிறார்கள்.
அப்படி கடந்த வாரம் ஐதராபாத்தில் நடைபெற்ற குஷி படத்தின் இசை வெளியீட்டு வெளியீட்டு விழாவில் நடிகை சமந்தா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் மேடையில் ஏறி ரொமான்டிக் நடமாடியது ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. அது குறித்த புகைப்படங்களும், வீடியோக்களும் சோசியல் மீடியாவில் வெளியானது.
இதனை அடுத்து மையோசிடிஸ் சிகிச்சைக்காக நடிகை சமந்தா அமெரிக்கா சென்றிருக்கும் நிலையில் அங்கு ஜாலியாக தனது நண்பர்களோடு அரட்டை அடித்து ஊர் சுற்றி வருகிறார் அப்பொழுது எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
அப்படி புகைப்படம் ஒன்றில் தனது ஆண் நண்பருடன் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் பொழுது எடுத்த புகைப்படத்தை சமந்தா பகிர இதனை பார்த்த ரசிகர்கள் சிகிச்சைக்காக போன இடத்திலும் கூட பிட்னஸ் தேவைதானா என கலாய்த்து வருகின்றனர். இதனை அடுத்து அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற 41வது இந்திய தின அணிவகுப்பிலும் நடிகை சமந்தா கலந்துக் கொண்டார். அங்கு சாலையில் ரசிகர்களோடு அவர் நடந்து சென்று உற்சாகப்படுத்திய புகைப்படங்களும் வைரலாகி வருகிறது.