தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா, இவர் தமிழில் கடந்த ஆண்டு சூப்பர் டீலக்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார், இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. நடிகை சமந்தா முன்னணி நடிகையாக வலம் வரும்பொழுது தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா மகன் நாக சைதன்யா திருமணம் செய்துகொண்டார்.
பல நடிகைகளுக்கு திருமணத்திற்கு பிறகு பட வாய்ப்புகள் கிடைப்பதில்லை ஆனால் நடிகை சமந்தாவிற்கு திருமணத்திற்கு பிறகும் பல வாய்ப்புகள் அமைந்து வருகின்றன, ஊரடங்கு காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது அதேபோல் பிரபலங்களும் வீட்டிலேயே இருக்கிறார்கள்.
அதுமட்டுமில்லாமல் சினிமா படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பல நடிகைகள் வீடியோக்களை வெளியிடுவது, உணவை சமைத்து அந்த வீடியோவை வெளியிடுவது, அழகான புகைப்படங்களை வெளியிடுவது என தங்களை பிஸியாக வைத்துக் கொள்கிறார்கள்.
அந்த வகையில் நடிகை சமந்தா இரண்டு விரல்களை நீட்டி விக்டரி என்று காட்டி தன்னுடைய மேக்கப் இல்லா புகைப்படத்தை வெளியிட்டுள்ளார், பொதுவாகவே ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த நடிகர் மற்றும் நடிகைகள் மேக்கப்போடு சினிமாவில் பார்த்து இருப்பார்கள் ஆனால் மேக்கப் இல்லாமல் பார்த்திருக்க மாட்டார்கள் அதனால் மேக்கப் இல்லாமல் பார்ப்பதற்கு அதிக ஆர்வம் காட்டுவார்கள்.
அந்த வகையில் நடிகை சமந்தா தற்பொழுது மேக்கப் இல்லாத புகைப்படத்தை பார்த்து அவரது ரசிகர்கள் பலரும் லைக் போட்டும் கமெண்ட் செய்தும் ட்ரண்ட் செய்து வருகிறார்கள்.
இதோ மேக்கப் இல்லாமல் இருக்கும் சமந்தாவின் புகைப்படம்.
— Samantha Akkineni (@Samanthaprabhu2) May 28, 2020