தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக ஓடுவர் நடிகை சமந்தா. இவர் வருடத்திற்கு இரண்டு, மூன்று வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். கடைசியாக இவர் நடித்த யசோதா திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வெற்றிகண்டது அதனை தொடர்ந்து சகுந்தலம், குஷி போன்ற படங்களில் நடித்துள்ளார்.
இதில் முதலாவதாக சகுந்தலம் திரைப்படம் கோலாகலமாக ரிலீசாக உள்ளது. இப்படி இருக்கின்ற நிலையில் மயோசிடிஸ் நோயினால் பாதிக்கப்பட்ட நடிகை சமந்தா அப்பொழுது சந்தித்த பிரச்சனைகள் குறித்து சமிபத்தில் வெளிப்படையாக பேசி உள்ளார்.. மயோசிடிஸ் நோய் பாதிப்பு காரணமாக நடிகை சமந்தாவின் உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்டது எந்த அளவிற்கு என்றால் தசைகள் பயங்கரமாக வலியை கொடுத்தன.
எலும்புகள் பலவீனமாகி அவர் சோர்ந்து விட்டாராம் சில நாட்கள் படுகையில் இருந்து எழுந்தரிக்க கூட முடியவில்லை அந்த அளவிற்கு சிரமமாக இருந்தது. மேலும் கடுமையான ஒற்றைத் தலைவலி பாதிப்பும் அவருக்கு இருந்ததாம் இந்த தலைவலியால் சாதாரணமான செயலைகளை செய்வது கூட கடினமாக இருந்ததாகவும் பகிர்ந்தார். கடந்த பேட்டி ஒன்றில் கூட ஒரு நாள் ஒல்லியாகவும், ஒரு நாள் உண்டாகவும் இருக்கிறேன்.
ஒருநாள் உடம்பு சரியில்லாமல் இருக்கிறேன் என்னுடைய உடம்பு தோற்றத்தில் எனக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை எனக் கூறினார் அதுமட்டுமில்லாமல் கண்களில் கூட வலியை அனுபவித்து உள்ளார். கண்களில் பெரும் வலியை அனுபவித்து உள்ளார் கண்களில் ஊசி போடுவது போன்று வலியுடன் காலையில் படுக்கையில் இருந்து எழுந்து வருவாராம்..
அவரது கண்களில் கடுமையான வலி கண்கள் சில நாட்கள் மோசமாக விடுகிறது என கூறினார் இப்படி கடந்த எட்டு மாதங்களாக பல சித்திரவதைகளை நடிகை சமந்தா சந்தித்துள்ளார் ஒருநாள், ரெண்டு நாள் நாளே தாங்க முடியாது மாத கணக்கில் வலியை தாங்குவது சாதாரண விஷயம் இல்லை என கூறி நடிகை சமந்தாவுக்கு ஆறுதல் சொல்லி வருகின்றனர்.