வெள்ளித்திரையில் பானா காத்தாடி திரைப்படத்தின் மூலம் மக்களிடையே மிகவும் புகழ் பெற்று விளங்கிய நடிகை சமந்தா இவர் இந்த திரைப்படத்தை தொடர்ந்து பல திரைப்படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் தனது நடிப்பு திறமையை முழுமையாக வெளிப்படுத்தி அதன் மூலம் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை நிரந்தரமாக பிடித்துவிட்டார்.
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது அவ்வாறு நிறைய சர்ச்சைக்குரிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.சமீபத்தில் கூட இவர் மீது பல சர்ச்சைகள் எழும்பியது.
இவர் தமிழில் தற்பொழுது இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் படு பிஸியாக நடித்து வருகிறார்.அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தை தொடர்ந்து பல திரைப்படங்களிலும் கமிட்டாகியிருக்கிறார் என தகவல் வைரலானதை நாம் பார்த்திருப்போம்.
பொதுவாகவே பல சினிமா பிரபலங்களும் தங்களுக்கு பிடித்தமாதிரி பெயர்களை வைத்துக் கொள்வார்கள் அந்த வகையில் சமந்தா தனது டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமந்தா அக்கினேனி என பெயர் வைத்திருந்தார் ஆனால் தற்பொழுது S என்று பெயரை மாற்றி வைத்துள்ளார் இதனை கண்ட ரசிகர்கள் பலரும் எதற்காக இவர் S என்று பெயரை மாற்றி வைத்துள்ளார் என பல கேள்விகளை சமூக வலைதள பக்கங்களில் எழுப்புகிறார்கள்.
அதுமட்டுமல்லாமல் இதனை பார்த்த ஒரு சில ரசிகர்கள் சமந்தா நடிக்கும் திரைப்படங்கள் மற்றும் இவர் எதற்காக இப்படி பெயர் மாற்றி வைத்துள்ளார் என பல கேள்விகளை சமூக வலைதளங்களில் எழுப்புவது மட்டுமல்லாமல் ஒரு சில ரசிகர்கள் சமந்தாவின் புதிய அவதாரம் இதுதானா எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை என கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.