40 வயது ஆன்ட்டிக்கு அம்மாவாக நடிக்கும் நடிகை சமந்தா.! கழுவி ஊற்றும் ரசிகர்கள்..

samantha-

தமிழ் திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமாகி தற்பொழுது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. தமிழ், தெலுங்கு என இரு திரைவுலகிலும் பிசியாக இருந்து வரும் நடிகை சமந்தா தொடர்ந்து ஏராளமான முன்னணி நடிகர்கள் திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளை பெற்று வருகிறார்.

இப்படிப்பட்ட நிலையில் தனது விவாகரத்திற்கு பிறகு கவர்ச்சியிலும் ஆர்வம் காண்பித்து வருவதால் இவருடைய திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. அப்படி புஷ்பா படத்தில் இவருடைய ஐட்டம் நடனம் பலரையும் கவர்ந்தது இதனை அடுத்து சில திரைப்படங்களில் நடித்து வந்த சமந்தாவிற்கு திடீரென மையோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டார்.

எனவே சிறிது காலம் வெளியில் தலை காட்டாமல் இருந்து வந்த நிலையில் தற்பொழுது மீண்டு அந்த நோய்யில் இருந்து குணமானதால் திரைப்படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். அந்த வகையில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களில் நடித்து பிசியாக இருந்து வரும் இவ்வாறு தற்பொழுது தெலுங்கில் விஜய் தேவரகொண்டனுடன் இணைந்து குஷி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் மிகவும் விறுவிறுப்பாக துர்க்கியில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் விஜய் தேவரகொண்டனுடன் சமந்தா சுற்றி தெரியும் புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது நடிகை சமந்தா 40 வயது இருக்கும் நடிகைக்கு அம்மாவாக நடிக்க இருப்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

citadel
citadel

அதாவது ஹிந்தியில் திரைவுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் பிரியங்கா சோப்ரா சிட்டாடெல் என்ற வெப் தொடரில் நடித்து வருகிறார். இதில் சமந்தாவும் நடித்து வரும் நிலையில் இந்தி நடிகர் அருண் தவான் உட்பட பலரும் நடித்து வருகின்றனர். இதனை தி ஃபேமிலி மேன் வெத் தொடரை இயக்கிய ராஜ் மற்றும் டிகே இயக்குகின்றார்கள்.

மேலும் நடிகை சமந்தா பிரியங்கா சோப்ராவுக்கு அம்மாவாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியான நிலையில் இதனை சமந்தா உறுதி செய்துள்ளார். இன்னை அடுத்து 1980, 90களில் நடக்கும் பிளாஷ்பேக் காட்சிகளில் சமந்தா மற்றும் வருண் நடிக்கின்றனர். இவ்வாறு தன்னைவிட வயது அதிகமாக இருக்கும் நடிகைக்கு சமந்தா அம்மாவாக நடிப்பதால் ரசிகர்கள் இதனை கிண்டல் செய்து வருகின்றனர்.