பிரபல நடிகையின் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பாலிவுட்டில் கதாநாயகியாக களமிறங்கும் நடிகை சமந்தா..!

samantha-0

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாகவும் முன்னணி நடிகையாகவும் வலம் வந்தவர் நடிகை டாப்ஸி இவர் பல்வேறு தமிழ் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தது மட்டுமல்லாமல் பல பாலிவுட் திரைப்படங்களில் நடித்துள்ளார் அந்தவகையில் இவர் நடித்த ஆடுகளம் திரைப்படத்தை இன்றும் ரசிகர்களால் மறக்க முடியாத படமாக அமைந்துவிட்டது.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை திரைப்படத்தில் கதாநாயகியாக நடிப்பது மட்டுமல்லாமல் தன்னுடைய சொந்த முயற்சியின் மூலமாக ஒரு தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இவ்வாறு இந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாக பல்வேறு திரைப்படங்களை தயாரித்து வருகிறார்.

அந்த வகையில் சினிமாவில் சாதிக்க வேண்டுமென முழுமூச்சுடன் இருக்கும் பிரபலங்களுக்கு தன்னுடைய தயாரிப்பு நிறுவன வாசல் திறந்து இருக்கிறது என்று கூறியிருந்தார் அந்த வகையில் இவர் சினிமாவில் சாதிக்க நினைப்பவருக்கு வாய்ப்பு கொடுப்பதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நடிகை டாப்சி அடுத்ததாக தயாரிக்கப் போகும் படத்தில் நடிகை சமந்தா ஹீரோயினாக நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன இவ்வாறு வெளியாகும் திரைப்படமானது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படமாக கருதப்படுகிறது.

அப்படி இந்த திரைப்படத்தில் சமந்தா நடிப்பது உறுதியாகி விட்டால் சமந்தா முதன்முதலாக பாலிவுட்டில் நடித்த திரைப்படம் இதுவாகத்தான் கருதப்படும் அதுமட்டுமில்லாமல் சமந்தாவை முதல் பாலிவுட் படத்தை நடிகை டாப்சி தான் தயாரித்த பெருமையும் அவருக்கு உண்டு.

tapsee
tapsee

மேலும் மிக விரைவில் இந்த திரைப்படம் குறித்த அப்டேட்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.