தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக கலக்கி வரும் நடிகை சமந்தா சமீபத்தில் பிரதமர் மோடிக்கு ஆதரவளிக்கும் வகையில் பேசிவுள்ள வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் தற்பொழுது யசோதா, சகுந்தலம், குஷி, அரேஞ்ச்மெண்ட்ஸ் ஆஃப் லவ் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
மேலும் யசோதா, சகுந்தலாம் ஆகிய படங்களின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் விரைவில் வெளியாக தயாராக இருக்கிறது.மேலும் குஷி என்ற படம் தெலுங்கில் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த குஷி திரைப்படத்தினை ஷிவ நிறுவாணா இயக்குகிறார்.மேலும் இந்த படத்தில் விஜய் தேவரகொண்டானுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் நடிகை சமந்தா.
இந்த படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் வருகின்ற டிசம்பர் மாதம் கிறிஸ்மஸ் அன்று வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இதனைத் தொடர்ந்து ஹிந்தியில் வெப் சீரியல் ஒன்றிலும் நடித்து வருகிறார் நடிகை சமந்தா இவ்வாறு தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து வரும் நடிகை சமந்தா சில படங்களின் வாய்ப்பை இழந்து உள்ளதாக கூறப்படுகிறது.
ஏனென்றால் இவர் சமீபத்தில் தன்னுடைய சம்பளத்தை அதிக அளவில் உயர்த்தி உள்ளார். இதன் காரணமாக ஒரே மாதத்தில் தமிழில் ஒரு படத்திலும் தெலுங்கில் ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாக நடித்திருந்த திரைப்படத்திலிருந்தும் விலகி உள்ளார். இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் நடிகை சமந்தா மோடியின் ஆதரவாளர் என பேசியுள்ள வீடியோ ஒன்றிய இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
அதில் அவர் கூறியதாவது நான் எப்பொழுதுமே மோடி ஜி அவர்களின் ஆதரவாளர் என கூறியுள்ளார் மேலும் அவரின் செயல்பாடுகள் எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் பிரதமர் மோடி அவர்களால் நம்முடைய நாட்டில் பல மாற்றங்களை சந்தித்துள்ளது எனவும் பல விஷயங்கள் நாட்டை முன்னோக்கி நகர்த்துகிறது எனவும் நம்புவதாக கூறியுள்ளார் இவ்வாறு வெளிப்படையாக இவர் கூறியதால் ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள்.