நடிகை சமந்தா தற்பொழுது சாகுந்தலம் படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வரும் நிலையில் நாக சைதன்யா நடிகைகளுடன் டேட்டிங் செய்து வருவது குறித்து பதிலளித்துள்ள நிலையில் இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை சமந்தா தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார்.
இவ்வாறு சினிமாவின் புகழின் உச்சத்தில் இருந்து வந்த இவர் திடீரென நடிகர் நாக சைதன்யாவை கடந்த 2017ஆம் ஆண்டு காதலித்து பெற்றோர் சமதத்துடன் திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி நான்கு வருடங்கள் ஒன்றாக வாழ்ந்து வந்த இவர்கள் கடந்த 2021ஆம் ஆண்டு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர். விவாகரத்திற்கு பிறகு சமந்தா மிகவும் பிசியாக இருந்து வருகிறார்.
இவரை அடுத்து மறுபுறம் நாக சைதன்யா அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தாலும் பல நடிகைகளுடன் டேட்டிங் செய்து வருவதாக செய்திகள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் அண்மையில் பொன்னியின் செல்வன் நடிகை சோபிதா துலிபாலாவுடன் லண்டனுக்கு சுற்றுலா மேற்கொண்டு இருந்தார் அங்கு டேட்டிங் செய்யும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலானது.
இந்நிலையில் நடிகை சமந்தா நடித்துள்ள சாகுந்தலம் திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதி அன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தினை குணசேகரன் இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தின் நடிகை சமந்தாவுக்கு ஜோடியாக மலையாள நடிகர் தேவ் மோகன் நடித்துள்ளார்.
தற்பொழுது சாகுந்தலம் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மிகவும் பிசியாக நடைபெற்று வரும் நிலையில் அதில் விவாகரத்துக்கு பின் நடிகர் நாக சைதன்யா நடிகையுடன் டேட்டிங் செய்து வருவது குறித்து நடிகை சமந்தாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சமந்தா கூறியதாவது, எவன் எவ கூட டேட்டிங் செய்தால் எனக்கென்ன நான் எதைப் பற்றியும் கவலைப்படவில்லை..
காதலின் மதிப்பை அறியாதவர்கள் எத்தனை பேருடன் பழகினாலும், டேட்டிங் செய்தாலும் கடைசியில் கண்ணீரில் தான் முடியும், குறைந்தபட்சம் அந்த பெண் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் அவர் தன் நடத்தையை மாற்றிக் கொண்டு பெண்ணை காயப்படுத்தாமல் பார்த்துக் கொண்டால் அது அனைவருக்கும் நல்லது என பதில் அளித்துள்ளார்.