எனது திருமண வாழ்க்கையில் 100 சதவீதம் உண்மையாகவே இருந்தேன்.! முதன்முறையாக விவாகரத்து பற்றி கூறிய நடிகை சமந்தா..

samantha
samantha

நடிகை சமந்தா முதல் முறையாக தன்னுடைய விவாகரத்து குறித்து பேசி இருக்கும் நிலையில் அந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் சமந்தா பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். இப்படிப்பட்ட நிலையில் இவர் நடிகர் நாகசைதன்யாவை காதலித்து பெற்றோர் சமதத்துடன் திருமணம் செய்து கொண்ட நிலையில் திருமணமாகிய நான்கு வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த இவர்கள் கடந்த 2021ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

விவாகரத்திற்கு பிறகு சினிமாவில் அதிக ஆர்வம் காட்டி வந்த இவர் புஷ்பா படைத்த இடம் பெற்றிருந்த ஊ சொல்றியா மாமா ஊ ஊ சொல்றியா பாடலில் ஐட்டம் டான்ஸ் ஆடி கலக்கி இருந்தார் இப்படிப்பட்ட நிலையில் இவர் மயோசிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் அதற்காக சிகிச்சை மேற்கொண்டு வந்ததால் திரைப்படங்களில் நடிக்க முடியாமல் போனது. எனவே அண்மையில் வெளியான யசோதா படத்தின் ப்ரோமோஷனல் கலந்து கொண்ட நடிகை சமந்தா கண்ணீர் மல்க பேட்டியளித்தது ரசிகர்களுக்கிடையே கவலையை ஏற்படுத்தியது.

மேலும் நோயுடன் போராடிய சமந்தா விரைவில் குணமாகுவார் என பலரும் நம்பிக்கை தெரிவித்து வந்தனர். அந்த வகையில் தற்பொழுது இவர் படங்களின் நடிக்க தொடங்கி இருக்கும் நிலையில் இவருடைய நடிப்பில் விரைவில் சாகுந்தலம் திரைப்படம் வெளியாக உள்ளது. எனவே இந்த படத்தின் ப்ரோமோஷனில் பங்கு பெற்று வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் அவர் பேசிய வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதில் ஊ சொல்றியா மாமா பாடலுக்கு ஆடிய நடனம் அனுபவத்தை பகிர்ந்த இவர் அப்பொழுது என்னுடைய ஒவ்வொரு நலம் விரும்பிகளும், குடும்ப உறுப்பினர்களும் ஒரு ஐட்டம் பாடலுக்கு நடனம் ஆட வேண்டாம் என்று கூறினர் ஆனால் அதை செய்வதில் நான் உறுதியாக இருந்தேன்.

விவாகரத்து பெற்ற பிறகு அதே வீட்டில் உட்கார விரும்பவில்லை நான் எந்த தவறும் செய்யவில்லை 100 சதவீதம் உண்மையாகவே இருந்தேன் என சமந்தா பகிர்ந்துள்ளார். இதனை அடுத்து நடிகை சமந்தா விஜய் தேவரகொண்டனுடன் இணைந்து குஷி திரைப்படத்தில் நடித்துவரும் நிலையில் இந்த படமும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.