சிவராத்திரியை முன்னிட்டு பற்பல நடிகைகளுடன் குத்தாட்டம் போட்ட நடிகை சமந்தா..! இணையத்தில் வைரலாகும் வீடியோ இதோ..!

samantha-sivarathiri
samantha-sivarathiri

தமிழ் திரையுலகில் மாஸ்கோவின் காவேரி என்ற திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை சமந்தா இவர் இந்த திரைப்படத்தை தொடர்ந்து பானாகாத்தாடி ,நீதானே என் பொன்வசந்தம், போன்ற பல்வேறு மெகாஹிட் திரைப்படத்தில் நடத்துவதன் மூலமாக எளிதில் பிரபலமாகிவிட்டார்.

அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தை தொடர்ந்து நான் ஈ, கத்தி, 24, மெர்சல் சூப்பர் டீலக்ஸ் போன்ற பல்வேறு மேலாகி திரைப்படத்தில் நடித்துள்ளார் இவ்வாறு இவர் திரைப் படத்தில் கமர்ஷியலாக நடிப்பது மட்டுமல்லாமல் கவர்ச்சியாக நடிப்பதில் மூலமாக இளசுகளின் கவர்ச்சி கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தற்போது இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் போன்ற பல்வேறு மொழிகளில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இவ்வாறு பிரபலமான நமது நடிகை கடந்த 2017 ஆம் ஆண்டு பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் ஒரே மகனான நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார்.திருமணம் ஆனாலும் திரைப்படத்திற்கு கட்டுப்பாடு இன்றி தனது அழகை சினிமாவிற்கு அர்பணித்து விட்டார்.

இவ்வாறு திருமணத்திற்கு பிறகு சூப்பர் டீலக்ஸ் எனும் திரைப்படத்தில் நடித்த நடிகை சமந்தாவை பார்த்த அனைவரும் ஆச்சரியம் அடைந்து விட்டார்கள் ஏனெனில் இந்த திரைப்படம் கொஞ்சம் வித்தியாசமானதாக இருந்தது அது மட்டுமல்லாமல் இதை தொடர்ந்து தற்போது விஜய் சேதுபதியுடன் காத்துவாக்குல இரண்டு காதல் எனும் திரைப்படத்தில் நடிகை நயன்தாராவுடன் இணைந்து நடிக்க உள்ளார்.

தற்போது கோவாவில் நேற்று நடைபெற்ற ஈஷா யோகா மையத்தில் சிவராத்திரி விழா நடந்துள்ளது இவ்வாறு கோலாகலமாக கொண்டாடப்பட்ட இந்த நிகழ்ச்சியில் பிரபல நடிகையான ராகுல் பிரீத் சிங், சமந்தா தெலுங்கு நடிகை லட்சுமி மஞ்சு போன்றவர்கள் கலந்து உள்ளார்கள். அதுமட்டுமில்லாமல் இவர்கள் அனைவரும் இணைந்து மிக சந்தோஷத்துடனும் உற்சாகத்துடனும் நடனம் ஆடிய வீடியோ ஒன்று சமூக வலைதள பக்கத்தில் மிகவும் வைரலாக பரவி வருகிறது.