தமிழ் மொழி மட்டுமின்றி தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை சமந்தா இவர் பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பொதுவாக கதாநாயகிகள் திருமணம் செய்து கொண்டாலே போதும் அடக்க ஒடுக்கமாக நடித்து வருவார்கள்.
ஆனால் நடிகை சமந்தா அதற்கு மாறாக திருமணத்துக்கு பிறகு தான் மிகவும் மோசமான கதாபாத்திரத்தில் நடிப்பது மட்டுமின்றி மிகவும் கவர்ச்சிகரமாக நடித்து வருகிறார் இந்நிலையில் நடிகை சமந்தா கதையம்சம் உள்ள திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படத்தில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறாராம்.
இந்நிலையில் திருப்பதிக்கு சென்ற நடிகை சமந்தா விஐபி தரிசனத்தை முடித்துவிட்டு வெளியேறிய போது பத்திரிகையாளர்கள் பலரும் சமந்தாவிடம் கேள்வி எழுப்ப ஆரம்பித்தார்கள் அப்போது பத்திரிகையாளர் ஒருவர் விவாகரத்து பற்றி கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளித்த நடிகை சமந்தா நான் கோவிலுக்கு வந்துள்ளேன் உங்களுக்கு அறிவு இல்லையா என கடுப்பாகி பத்திரிகையாளரிடம் பேசியுள்ளார் இவ்வாறு அவர் பேசியது சமூகவலைத்தள பக்கத்தில் மிக வைரலாக பரவி வருகிறது.
நடிகை சமந்தா திருப்பதிக்கு வருவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது ஏற்கனவே ஓ பேபி திரைப்படத்தில் நடித்திருந்தார் இத்திரைப்படம் மெகா ஹிட் அடிக்க வேண்டும் என்ற காரணத்தினால் பாத யாத்திரை செய்து வந்தார் அப்போது ரசிகர்கள் பலர் சமந்தாவுடன் செல்பி எடுத்துக் கொண்டார்கள் இதன்மூலமாக சமந்தா அப்பொழுது ரசிகர்களிடையே மிகக் கடுமையாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.