நடிகை சமந்தா நடிப்பில் தற்பொழுது சாகுந்தலம் திரைப்படம் உருவாகி இருக்கும் நிலையில் எந்த படத்தின் டிரைலர் சற்று முன்பு வெளியாகிய சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை சமந்தா தொடர்ந்து பல வெற்றி திரைப்படங்களை தந்து வருகிறார்.
அந்த வகையில் முதன் முறையாக இவர் புராணக் கதையை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள சாகுந்தலம் திரைப்படத்தில் நடித்த முடித்துள்ள நிலையில் இந்தப் படத்தில் இவருக்கு ஜோடியாக மலையாள நடிகர் தேவ் மோகன் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தினை குணசேகரன் இயக்கியிருக்கும் நிலையில் வாசுரி திரைப்படத்தினை இயக்கிய தில்ராஜ் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் மூலம் மிகப்பெரிய பட்ஜெட்டில் சாகுந்தலம் திரைப்படத்தினை உருவாக்கியுள்ளார்.
இந்த திரைப்படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் உருவாகி இருக்கும் நிலையில் வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. மேலும் இந்தப் படம் மகாபாரதத்தில் சகுந்தலம் மற்றும் மன்னர் துஷ்யன் ஆகியோர்களின் காவிய காதலை மையமாக வைத்த இந்த படம் உருவாகியுள்ளது.
நடிகை சமந்தாவின் நடிப்பில் கடைசியாக யசோதா திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியினை கண்ட நிலையில் இதனை அடுத்து தற்பொழுது சாகுந்தலம் திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் டிரைலர் சற்று முன்பு வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது இந்த ட்ரெய்லரில் மனம்
சொல்லும் பேச்சைக் கேட்டு மன்னன் துஷ்யந்திடம் காதல் கொண்டு பிறகு கர்ப்பமாகி விடுகிறார். இதனால் ஏற்பட்ட பிரச்சனைகளை எதிர்கொள்ளும் வகையில் அமைந்திருக்கும் காட்சிகளை பார்த்து பாகுபலிக்கே டஃப் கொடுக்கும் விதத்தில் உள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.