இரண்டு நடிகர்களுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருத்தப்படும் நடிகை சமந்தா.

samantha
samantha

தெலுங்கு சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகியாக விஸ்வரூபம் எடுத்துள்ளவர் சமந்தா. உச்ச நட்சத்திரமாக இருந்தால் சமீப காலமாக வாய்ப்புகள் அவருக்கு கிடைத்து வருகிறது அதிலும் குறிப்பாக தெலுங்கு சினிமாவில் தான் இவருக்கு அதிகம் வாய்ப்புகள் குவிந்து கிடக்கின்றன.

அதனால் படத்தின் கதைக்கு ஏற்றபடியே திறமையையும், கிளாமரையும் காட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அண்மையில் கூட அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படத்தில் ஊ ஊ சொல்றியா மாமா பாடலுக்கு தம்மாத்துண்டு டிரெஸ்ஸை போட்டுக்கொண்டு கிளாமர் நடிகை போல செம குத்தாட்டம் போட்டார்.

புஷ்பா திரைப்படம் வெற்றிபெற இந்த பாடலும் ஒரு முக்கிய காரணம் என்பது குறிப்பிடதக்கது இதை தொடர்ந்து தற்போது பல்வேறு படங்களை தன் கையில் வைத்துள்ளார். காத்து வாக்குல ரெண்டு காதல், யசோதா மற்றும் ஒரு த்ரில்லர் திரைப்படமும் கையில் இருக்கிறது.

சினிமா உலகில் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கும் நடிகை சமந்தா. அவ்வப்போது தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டும் வலம் வருகிறார் ஒரு பக்கம் தனது தோழிகளுடன்  கோவிலுக்கு செல்வது மறுபக்கம் கோவாவில் தனது தோழிகளுடன் குத்தாட்டம் போடுவதும் ஆக வாழ்க்கையை செம ஜாலியாக அனுபவித்து வருகிறார் அதோடு மட்டுமல்லாமல் தனது ரசிகர்களை வெகுவாக கவர நாம் எதிர்பார்க்காத புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்ப கூட நடிகை சமந்தா வெண்ணிலா கிஷோர் மற்றும் ராகுல் ரவீந்திரன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார் சமந்தா மேலும் அவர் சில பதிவுகளையும் அங்கு குறிப்பிட்டுள்ளார் நீங்கள் இல்லாமல் நான் என்ன செய்வேன் நண்பர்களே என கூறியுள்ளார் இதோ அந்த அழகிய புகைப்படம்.

samantha
samantha