பாலிவுட் ஹீரோவுடன் இணைய மறுத்த நடிகை சமந்தா – புலம்பித் தள்ளும் ரசிகர்கள்.!

samantha-
samantha-

தென்னிந்திய சினிமா உலகில் தொடர்ந்து டாப் நடிகர்கள் படங்களில் நடித்து தன்னை உயர்த்திக் கொண்டவர் நடிகை சமந்தா குறிப்பாக தமிழில் சூர்யாவுடன் அஞ்சான், 24. விஜயுடன் மெர்சல், ஜீவாவுடன் நீதானே என் பொன்வசந்தம், விக்ரமுடன் பத்து எண்றதுக்குள்ள போன்ற நடிகர்களுடன் நடித்து வலம் வந்தார்.

இப்பொழுதும் உச்ச நட்சத்திர நடிகர்களுடன் நடித்து வருகிறார். நடிகை சமந்தா சினிமாவை நன்கு தெரிந்து கொண்டதால் எந்த மாதிரியான கதாபாத்திரம் கொடுத்தாலும் நடிக்கிறார் அதேபோல்தான் கிளாமர் கதாபாத்திரத்திலும் பின்னி பெடல் எடுக்கிறார்.

குறிப்பாக விவாகரத்துப் பெற்ற பின் அதிகமாக கிளாமரில் கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது. இது அவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது அண்மையில் கூட புஷ்பா படத்தில் ஒ சொல்றிய மாமா பாடலுக்கு செம்ம குத்து குத்தி தன்னைப் பிரபலப்படுத்திக் கொண்டார்.

இப்பொழுது நடிகை சமந்தா சகுந்தலம், யசோதா ஆகிய படங்களில் நடித்து வருகிறார் இப்படி இருக்கின்ற நிலையில் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் நடிக்க மறுத்து உள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது. அந்தப் படம் வேறு யாருமில்ல ஷாருக்கான் அட்லீ இணைந்து பணியாற்றி வரும் “ஜவான்” படத்தில் முதன் முதலில் ஹீரோயின்னாக நடிக்க பட குழுவினர்.

முதலில் நடிகை சமந்தாவை தான் தேர்வு செய்தது ஆனால் சில காரணங்களால் அந்த படத்தை மறுத்துவிடவே பின் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாராவை புக் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இச்செய்தி தற்போது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது ஷாருக்கான் படத்தில் நடித்தால் பாலிவுட்டில் ஒரு வலம் வரலாம் அப்படிப்பட்ட வாய்ப்பை அவர் மீது உள்ளது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுக்கிறதாம்.