நயன்தாரா கல்யாணத்திற்கு வர மறுத்த நடிகை சமந்தா.? உள்ளே ஒளிந்திருக்கும் ரகசியம்.!

nayanthara samantha
nayanthara samantha

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை ஒருவழியாக இன்று திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். இவர்களது திருமணம் மகாபலிபுரத்தில் மிக கோலாகலமாக நடத்தப்படுகிறது உறவினர்கள் நண்பர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என பலரும் கலந்து கொள்ள இருக்கின்றனர் . குறிப்பாக விக்கி – நயன்தாரா கல்யாணத்திற்கு அஜித், விஜய், ரஜினி, கமல், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் என பலர் கலந்துகொள்ள இருக்கின்றனர்.

இவர்களது கல்யாண வேலைகள் நேற்று கோலாகலமாக தொடங்கியது. பலத்த பாதுகாப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது மேலும் கேமரா செல்போன் போன்ற பல பொருட்கள் பயன்படுத்த கூடாது என கட்டுப்பாடுகளை போட்டு பயங்கரமான  நடத்தப்பட்டு வருகிறது. இந்த கல்யாணத்திற்கு யார் வருகிறார்களோ இல்லையோ நடிகை சமந்தா குறிப்பாக வருவார் என எதிர்பார்க்கப்பட்டது .

ஏனென்றால் அண்மையில் நயன்தாரா, சமந்தா, விஜய் சேதுபதி ஆகியோர் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் நடித்து வெற்றி பெற்றனர் இதில் நயன்தாராவும், சமந்தாவுக்கும் நல்ல பழக்கம் ஏற்பட்டு நண்பர்களானார்கள் இதனால் நயன்தாரா கல்யாணத்திற்கு முதல் ஆளாக வருவார் என பேசப்பட்டது.

ஆனால் தற்பொழுது தகவல் என்னவென்றால் சமந்தா தெலுங்கில் சகுந்தலம், யசோதா மற்றும் விஜய் தேவர்கொண்டா உடன் இணைந்து குஷி என்னும் படத்தில் நடித்து வருகிறார் இந்த படம் வருகின்ற டிசம்பர் 23 வெளியாக இருப்பதால் இதற்கான வேலைகளில் சமந்தா இறங்கி உள்ளாராம்.

அதனால் நயன்தாரா கல்யாணத்துக்கு வரமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றன. இதனால் நடிகை சமந்தா ஒரு புதிய முடிவை எடுத்துள்ளார் அதாவது சில வாரங்கள் கழித்து விட்டு நயன்தாராவை நேரில் சந்தித்து திருமண வாழ்த்துக்களை கூறுவார் என தெரியவருகிறது