பொதுவாக நடிகைகள் என்றாலும், நடிகர்கள் என்றாலும் சினிமாவில் ஓரளவிற்கு பிரபலம் அடையத் தொடங்கி விட்டால் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்களுக்கு இவர்கள் கண்டிஷன் போடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த வகையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக ஜொலிக்க வருபவர் சமந்தா. இவரும் ஒரு படத்தில் நடிப்பதற்கு கண்டிசன் போட்டு அந்த படத்தில் நடிக்க முடியாது என்று கூறி அவர்களை அனுப்பி விட்டாராம்.
பொதுவாக நடிகைகள் அழகாக இருந்தால் மட்டும் தான் சினிமாவில் பிரபலம் அடைய முடியும் அப்படிப்பட்டவர்களுக்கு மட்டும் தான் ரசிகர்கள் ஆதரவு கொடுப்பார்கள்.
எனவே நடிகைகளும் சினிமாவிற்கு அறிமுகமாகி பிரபலமடைய தொடங்கியதும் சர்ஜரி செய்து தங்களது அழகை மேம்படுத்திக் கொள்வார்கள். அந்தவகையில் சமந்தா மற்றும் நயன்தாரா இருவரும் மிகவும் முக்கியமானவர்கள்.
நயன்தாரா ஐயா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் என்பது நாம் அறிந்த ஒன்று தான் படத்தில் நயன்தாரா ஆன்ட்டி மாதிரி இருப்பார் என்பது நாம் பார்த்திருப்போம். ஆனால் தற்பொழுது செதுக்கி வைத்த தங்க சிலை போல் இருப்பார்.
இதன் மூலமே வயதானாலும் கூட நயன்தாரா மிகவும் இளமையாக வசீகரமான உடல் அமைப்பையும் பெற்றுள்ளார். அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இப்படிப்பட்ட நயன்தாரா இதுவரையிலும் இந்தியில் ஒரு படம் கூட நடித்தது இல்லை. ஏனென்றால் பாலிவுட்டில் நடிக்க ஆரம்பித்தால் எங்கு நமது மார்க்கெட்டிங் குறைந்து விடுமோ என்ற பயம். பத்தில் 11வது நடிகையாக இருப்பதைவிட இருக்கும் இடத்திலே முன்னணி நடிகையாக இருப்பது மேல் என்ற எண்ணத்தில் இதுவரையும் ஹிந்தியில் நடிக்காமல் இருந்து வருகிறார்.
அந்த வகையில் சமந்தாராவிற்கும் பாலிவுட்டில் நடிப்பதற்காக பட வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் சமந்தா பாலிவுட்டில் மட்டும் நான் நடிக்க மாட்டேன் இன்று கண்டிப்பாக தயாரிப்பாளர்களிடம் கூறிவிட்டாராம்.